நீங்கள் டோனி.. நான் தஹானி.. "வலிமை அப்டேட்" கொடுத்த பாக். வேகப்பந்து வீச்சாளர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீங்கள் டோனி நான் தஹானி என பாகிஸ்தான் பவுலர் ஷாநவாஸ் தஹானி தன்னை அறிமுகம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் இதில் தோனி மிகவும் ஃபிட்டாக இருப்பதாகவும் தஹானி தெரிவித்துள்ளார்.

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐசிசி டி 20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் கடந்த 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட தர வரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன.

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா

நேற்றைய தினம் ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையே போட்டி நடந்தது. அப்போது ஆஸ்திரேலியா அணி வென்றது. அது போல் மேற்கு இந்திய தீவுகள் - இங்கிலாந்து இடையே நடந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் மோசமாக விளையாடி தோற்றது. அந்த வகையில் இன்று உலகமே எதிர்நோக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெறுகிறது.

இளம் வேகப்பந்து வீச்சாளர்

இளம் வேகப்பந்து வீச்சாளர்

இந்த நிலையில் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷானவாஸ் தஹானி, இந்தியாவின் மகேந்திர சிங் டோனியை பார்த்து உற்காகமாகினார். பின்னர் அவரிடம் போன தஹானி, நீங்கள் தோனி, நான் தஹானி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் நீங்கள் வலிமையாக இருக்கிறீர்கள் என்றும் டோனியிடம் கூறியுள்ளார்.

வயதாகிவிட்டது

வயதாகிவிட்டது

அதற்கு டோனியோ, இல்லை இல்லை எனக்கு வயதாகிவிட்டது என காமெடியாக கூற, அதற்கு தஹானியோ இல்லை நீங்கள் முன்பை விட வலிமையாக இருக்கிறீர்கள் என கூறியுள்ளார். பின்னர் தோனி சிரித்து கொண்டே செல்கிறார். இந்த வீடியோ சமூகவ வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கிரிக்கெட் போட்டி

கிரிக்கெட் போட்டி

இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். 1992 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 50 ஓவருக்கு நடந்த உலக கோப்பை போட்டியில் 7 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்தியாவே வென்றுள்ளது. அது போல் 2007-ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் 5 முறை இரு அணிகளும் மோதியதிலும் இந்தியாவே 5லும் வென்றது.

இந்தியா- பாகிஸ்தான்

அது போல் சர்வதேச அளவிலான டி20 போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் 8 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில் 7 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் இரு நாடுகளும் டி20 உலக கோப்பையில் மோதுகின்றன. இதனால் ரசிகர்கள் இந்த போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+