ஐடி ஆன்சைட்லாம் தூசு.. அம்பானி டிரைவர் சம்பளம் தெரியுமா? அம்மாடி இவ்வளவா.. வியக்க வைக்கும் வருமானம்
பல ஐடி நிறுவனங்களில் இருப்பவர்கள் கூட இவ்வளவு சம்பளம் பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: முகேஷ் அம்பானியின் டிரைவரின் வருமானம் தற்போது இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. பல ஐடி ஊழியர்கள் அவரின் வருமான விவரத்தை பகிர்ந்து.. ச்சா நமக்கு கூட இவ்வளவு வருமானம் இல்லையே என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் முகேஷ் அம்பானி. கவுதம் அதானி 2014க்கு பின் மிக வேகமாக வளர்ந்தார்.
இந்த வளர்ச்சி காரணமாக இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்பதில் இருந்து முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டார். ஆனால் முகேஷ் அம்பானிக்கு பங்குகள் மூலமாக மட்டுமின்றி உண்மையில் பல்வேறு சொத்துக்கள் இருக்கின்றன.

மதிப்பு
பங்குகள் ரீதியாக அதானி பெரிய ஆளாக இருந்தாலும் முகேஷ் அம்பானிதான் நிஜத்தில் பெரிய பணக்காரர் என்று மதிக்கப்பட வேண்டும். ஏனென்றால் அம்பானி வெறும் பேப்பர் பணக்காரர் மட்டும் கிடையாது. இந்தியாவில் முகேஷ் அம்பானி இல்லாத துறையே கிடையாது என்று சொல்ல முடியும். டெலிகாம் துறை, எரிபொருள் துறை, மின்சாரத்துறை, அழகுசாதன பொருட்கள் துறை, ஜவுளி துறை, டயமண்ட் துறை, கடிகார உற்பத்தி, ஹோட்டல்கள், ரியல் எஸ்டேட் என்று எல்லா துறைகளிலும் முகேஷ் அம்பானி குழுமம் உச்சத்தில் உள்ளது. அம்பானி குடும்பம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும்.

வருமானம்
இவர்களின் அண்டிலியா வீடுதான் இந்தியாவிலேயே அதிக செலவில் கட்டப்பட்ட நிகழ்கால வீடு ஆகும். . அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் 2014 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் இந்த வீடுதான் முதலிடம் பிடித்தது. இதை கட்ட மட்டும் 60 மில்லியன் டாலர் செலவு ஆனது. உலகில் மிகவும் அதிக தொகையில் கட்டப்பட்ட வீடுகளில் இதுவும் ஒன்றாகும் . இப்படிப்பட்ட நிலையில்தான் முகேஷ் அம்பானியின் டிரைவரின் வருமானம் தற்போது இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. பல ஐடி ஊழியர்கள் அவரின் வருமான விவரத்தை பகிர்ந்து.. ச்சா நமக்கு கூட இவ்வளவு வருமானம் இல்லையே என்று குறிப்பிட்டு உள்ளனர்.

டிரைவர்
முகேஷ் அம்பானியின் டிரைவர் ஆவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அவருக்கு என்று ஒரு டிரைவர் படையே இருக்கிறது. பல கார்களை ஓட்ட வீட்டில் டிரைவர் படையே உள்ளது. அதில் தலைமை டிரைவர் ஒருவர்தான் எப்போதும் வண்டியை ஓட்டி வருகிறார். பாதுகாப்பு கருதி இவரின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. பல்வேறு சோதனைகள், பயிற்சிகள், பல நாள் ஆலோசனைகள் எல்லாம் கொடுக்கப்பட்ட பின்புதான் இவரை பணிக்கு எடுப்பார்கள். பாதுகாப்பு பயிற்சி மட்டுமின்றி பல்வேறு மொழிகள் பேசுவது, அவசரத்தில் சமயோஜிதமாக முடிவு எடுப்பது என்று ஒரு முதல்வரின் பாதுகாவலருக்கு கொடுக்கப்படும் பயிற்சிக்கு இணையாக இவருக்கு பயிற்சி கொடுக்கிறார்கள்.

வருமானம்
இவரின் தலைமை டிரைவருக்கு 2-3 லட்சம் ரூபாய் வருமானம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற டிரைவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பல ஐடி நிறுவனங்களில், மத்திய அரசு வேலைகளில் இருப்பவர்கள் கூட இவ்வளவு சம்பளம் பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட ஒரு பொஷிஷன் செல்லும் வரை இவ்வளவு சம்பளம் கிடைக்காது. ஆனால் அம்பானியின் டிரைவர்கள் மிக எளிதாக 2 லட்சம் வரை வருமானம் ஈட்டுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications