மும்பையில் 166 பேர் உயிரை குடித்த சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் தேர்தலில் போட்டி?
டெல்லி: நமது நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை மீது தாக்குதல் நடத்தி 166 உயிர்களைக் குடித்த சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அடுத்த ஆண்டு பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பையில் 2008-ம் ஆண்டு ஹபீஸ் சயீத் அனுப்பிய அஜ்மல் கசாப் உள்ளிட்ட பயங்கரவாதிகள் நிலைகுலைய வைக்கும் கொடூர தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் நாசவேலைகளை நடத்துவதையே இலக்காக கொண்டிருக்கும் ஹபீஸ் சயீத், சர்வதேச பயங்கரவாதி என பிரகடனம் செய்யப்பட்டிருப்பவர். இப்போதும் பாகிஸ்தான் அரவணைப்பில்தான் ஹபீஸ் சயீத் இருந்து வருகிறார்.

ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் Pakistan Markazi Muslim League- PMML என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். இந்தக் கட்சி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட இருக்கிறது. இத்தேர்தலில் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது மகன் தல்ஹா சயீத் ஆகியோரும் போட்டியிடப் போகிறார்களாம்.
ஹபீஸ் சயீத், லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கியவர். அவரது 2-வது மகன் தல்ஹா சயீத், லஷ்கர் இ தொய்பாவின் தற்போதைய மூத்த தளபதியாக இருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளையும் பயங்கரவாத தாக்குதல்களையும் செயற்படுத்தி வருவது தல்ஹா சஹீத்துதானாம். அதாவது லஷ்கர் இ தொய்பாவுக்கு காஷ்மீர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஆட்சேர்ப்பது, நாசவேலைகளுக்கு திட்டமிட்டு கொடுப்பது, நாசவேலைகளுக்கு கட்டளை பிறப்பிப்பது என அத்தனை பயங்கரவாத செயல்களையும் அப்பாவுக்கு துணையாக செய்வது தல்ஹா சயீத்தான்.
பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றுவதுதான் தங்களது இலக்கு என்கிறது ஹபீஸ் சயீத்தின் Pakistan Markazi Muslim League (PMML) கட்சி. ஏற்கனவே ஹபீஸ் சயீத்தின் ஒரு மகன் மர்ம நபர்களால் கடத்தப்படு தலை துண்டிக்கப்பட்டு வெறும் தலையில்லாத சடலமாக மீட்கப்பட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications