மாணவி முஸ்கானை பாராட்டிய அல்கொய்தா தலைவர்.. ஒசாமாவின் நம்பர் 2.. 4 மனைவிகள்.. யார் இவர்?
டெல்லி: கர்நாடகாவில் நடைபெற்ற ஹிஜாப் போராட்டத்தை ஆதரித்து அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் சவாஹிரி வீடியோ வெளியிட்டுள்ளார். யார் இந்த அல் சவாஹிரி.. இவரின் வரலாறு என்ன என்பது தொடர்பான முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள அரசு பியு கல்லூரியில் படிக்கும் மாணவி பிபி முஸ்கான் கான். ஹிஜாப் போராட்டத்தின் போது இந்துத்துவா மாணவர்கள் தன்னை நோக்கி ஜெய் ஸ்ரீராம் சென்று கோஷம் எழுப்ப பிபி முஸ்கான் கான் பதிலுக்கு அல்லாஹு அக்பர் என்று கோஷம் எழுப்பினார்.
இந்த வீடியோ பெரிய அளவில் வைரலானது. இந்த நிலையில் முஸ்கானை பாராட்டி அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் சவாஹிரி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அல்கொய்தா
இந்த வீடியோ மொத்தம் 9 நிமிடம் இருக்கிறது. அதில் அய்மன் அல் சவாஹிரி முஸ்கானை வெகுவாக பாராட்டி உள்ளார். அதோடு இந்த வீடியோவின் பின்பக்கம் "இந்தியாவின் புனிதமான பெண்" என்று முஸ்கானை பாராட்டும் வகையில் புகைப்படம் ஒன்றையும் வைத்துள்ளார். அதோடு இந்த மாணவியை பாராட்டும் வகையில் இவர் கவிதை ஒன்றையும் எழுதி உள்ளார்.

பாராட்டு
அதில், இந்துத்துவா கும்பலை முஸ்கான் தைரியமாக எதிர்கொண்டு இருக்கிறார். ஜிஹாத்தின் ஆற்றல் அவரிடம் இருந்தது. அவர் எங்கள் மதத்திற்கான, விடுதலைக்கான கோஷத்தை எழுப்பி உள்ளார். எங்கள் சகோதரி மிக முக்கியமான உயரத்தை அடைந்துவிட்டார், அல்லா அவருக்கான பரிசை வழங்குவார். இஸ்லாமிய மக்களை முஸ்கான் தட்டி எழுப்பி இருக்கிறார். முஸ்கான் ஒரு புனிதமான பெண், என்று பாராட்டி இருந்தார்.

சர்ச்சை
இந்த வீடியோ பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் யார் இவர்? திடீரென எப்படி இந்திய ஹிஜாப் விவகாரம் பற்றி பேசுகிறார் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவர் இவர்தான். இவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலையில், திடீரென ஹிஜாப் விவகாரம் பற்றி பேசி உள்ளார்.இதையடுத்து இந்திய உளவு அமைப்புகள், உள்துறை அமைப்புகள் இந்தியாவில் பல்வேறு அமைப்புகளை கண்காணிக்க தொடங்கி உள்ளன.

இளம் வயது
இளம் வயதிலேயே இஸ்லாமிய புரட்சி அமைப்புகள், குழுக்களில் இவர் பணியாற்றி இருக்கிறார். இவர் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் கிடையாது. இஸ்லாமிக் பிரதர்ஹுட் என்ற அமைப்பில் பணியாற்றி வந்தவர்தான் சவாஹிரி. அதன்பின் அதேபோன்ற இஸ்லாமிய அமைப்புகளை இணைத்து தனது 20 வயதிற்கு முன்பாகவே இவர் எகிப்த் இஸ்லாமிக் ஜிஹாத் என்ற அமைப்பை உருவாக்கினார். அப்போதே எகிப்தில் பல தாக்குதல்களை இவர் நடத்தினார்.

நான்கு மனைவிகள்
புனிதமான இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதே தன்னுடைய நோக்கம் சென்று இவர் பல முறை வீடியோக்களில் குறிப்பிட்டு இருக்கிறார். 1978ல் இவர் முதல் திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு மட்டும் 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன. இவருக்கு மொத்தமாக 4 மனைவிகள். குழந்தைகளின் எண்ணிக்கை 16க்கும் அதிகம். குழந்தைகளின் எண்ணிக்கையில் நிறைய குழப்பங்கள் உள்ளது.

பின்லேடன்
மருத்துவம் படித்த இவர் சில காலம் மருத்துவ விசா மூலம் சவுதிக்கு சென்று மறைமுகமாக வசித்து வந்தார். அங்கு சில காண்டாக்ட்ஸ் மூலம் அல் கொய்தா தொடர்பு கிடைத்து இருக்கிறது. அது தாலிபான் ஆட்சி ஆப்கானிஸ்தானில் தோன்றி, அதன்பின் அமேரிக்காவோடு மோதல் ஏற்பட்ட சமயம். இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர்கள் காரணமாக அமெரிக்கா மீது அல்கொய்தா கோபமாக இருந்த காலம். அப்போதுதான் ஒசாமாவை சவாஹிரி சந்திக்கிறார்.

நம்பர் 2
உடனே ஒசாமாவுடன் நெருக்கம் ஆகிறார். அதோடு 1998ல் தனது அமைப்பை அல்கொய்தா அமைப்புடன் இவர் இணைத்தார். மேலும் ஒஸாமாவிற்கு தனிப்பட்ட வகையில் நட்பாகி, அவருக்கு உதவியாளராகவும் ஆகிறார். அல்கொய்தா அமைப்பில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர், அதன் இரண்டாம் கட்ட தலைவராகிறார். அமெரிக்காவில் 9/11 தாக்குதலை நடத்தியதில் ஒசாமாவிற்கு முக்கிய ஆலோசனைகளையும் இவர் வழங்கி இருக்கிறார். இதற்கு முன் கலிபோர்னியாவிற்கு பல முறை திருட்டு பாஸ்போர்ட்டில் போய் விமான சேவைகளை நோட்டமும் இட்டிருக்கிறார்.

ஹிஜாப்பிற்காக உயிரை விட்ட மனைவி
அதன்பின் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் அறிவித்த பின் இவர் தலைமறைவானார். அங்கு இவர் தலைமறைவாக வசித்து வந்தார். ஒசாமாவை அபோதாபாத்தில் அமெரிக்கா கண்டுபிடித்த போது கூட சவாஹிரியை அமெரிக்காவால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவரின் மனைவி அஸ்ஸா ஆப்கானிஸ்தானில் ஒரு கட்டிடத்தில் இருந்த போது அதில் அமெரிக்கா டிரோன் தாக்குதல் நடத்தியதில் அஸ்ஸா பலியானார். காயத்தோடு கட்டிடம் ஒன்றின் கீழ் இருந்தவர்.. ஹிஜாப் இல்லாத காரணத்தால் வெளியே வந்து முகத்தை மறுத்து இடிப்பாட்டிற்கு உள்ளாகவே மரணம் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

பெண்கள் பற்றி என்ன பேசினார்
இப்போது போராட்டத்தில் ஈடுபடும் மாணவிகளை சவாஹிரி புனித பெண்கள் என்று பாராட்டி உள்ளார். ஆனால் இதே சவாஹிரிதான் 2008 ஏப்ரலில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பெண்களை மோசமாக விமர்சனம் செய்து இருந்தார். பெண்கள் வெளியே வர கூடாது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி உணவு சமைப்பது, வீட்டை பார்த்துக்கொள்வது மட்டுமே. அவர்கள் அல் கொய்தாவுள் இணைய முடியாது என்று குறிப்பிட்டார். இது பெரிய அளவில் சர்ச்சையானது.

அரசை கவிழ்க்க பிளான்
எகிப்து, ஈராக் என்று பல நாடுகளில் இவர் அரசை கவிழ்க்க முயற்சி செய்ததாக புகார் உள்ளது. பல தீவிரவாத தாக்குதல்களை இவர் நடத்தி இருக்கிறார். 90களின் இறுதியில் இவர் ரஷ்யாவின் எப்எஸ்பி எனப்படும் உளவுப்படை மூலம் நேரடி பயிற்சி பெற்றார் என்றும் அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. அமெரிக்காவில் தேடப்படும் டாப் 22 தீவிரவாதிகளில் இவரும் முக்கியமான ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பலியானதாக தகவல்
இது அல்கொய்தா அமைப்பின் தலைவர் பல காலங்களுக்கு பிறகு வெளியிட்ட வீடியோ. அல்கொய்தா அமைப்பு மூலமும் நீண்ட காலத்திற்கு பின் வெளியிடப்பட்ட வீடியோ இது இது. அல்கொய்தா தலைவரான இவர் பலியாகிவிட்டார் என்று கருதப்பட்ட நிலையில்தான் அந்த வீடியோ வெளியாகி உள்ளது. தான் சாகவில்லை இன்னும் இருக்கிறேன் என்று உணர்த்தும் வகையில் இவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications