இந்து மக்கள்தொகை குறையுது.. ஆனால் இந்தியாவில் இஸ்லாமிய மக்கள்தொகை 24.6% உயர்வு - அமித்ஷா பேச்சு
டெல்லி: ‛‛இந்தியாவில் இந்து மக்கள்தொகை 4.5 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதேவேளையில் இஸ்லாமிய மக்கள்தொகை 24.6 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இஸ்லாமியர்கள் ஊடுருவல் செய்வது தான் முக்கிய காரணம்'' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் இஸ்லாமிய மக்கள்தொகை 24.6 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஆனால் இந்து மக்கள்தொகை 4.5 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் குழந்தை பிறப்பு விகிதம் கிடையாது. மாறாக ஊடுருவல்கள் தான். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து அதிகமான இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவல் செய்துள்ளனர். நம் நாட்டுக்கு அகதியாக வருவதற்குள், ஊடுருவல் மூலமாக வருவதற்குள் வித்தியாசம் உள்ளது.

அதேபோல் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இந்து மக்கள்தொகை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. சுதந்திரத்துக்கு பின் பாகிஸ்தானில் இந்துக்கள் 13 சதவீதமாகவும், பிற சிறுபான்மையினர் 1.2 சதவீதமாக இருந்தனர். ஆனால் இப்போது 1.73 சதவீதம் என்ற அளவில் சிறுபான்மையினர் உள்ளனர். அதேபோல் வங்கதேசத்தில் 22 சதவீதமாக இருந்த இந்துக்கள் இப்போது 7.9 சதவீதமாக குறைந்துள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து ஏராளமான இந்துக்கள் நம் நாட்டில் அகதிகளாக வருகின்றனர்'' என்று கூறியுள்ளார்.
அதாவது நம் நாட்டில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வரும் இஸ்லாமியர்கள் தான் முக்கிய காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications