என் அப்பாவை ரொம்பவும் மிஸ் பண்றேன்.. ராகுல் காந்தி உருக்கம்

எனது தந்தை அன்பானவர், மென்மையானவர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "என்னுடைய தந்தை மென்மையானவர், அமைதியானவர். கனிவானவரும் அன்பானவரும் கூட. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று ராகுல் காந்தி உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.

பல தருணங்களில் தன் தந்தை மீதான பாசத்தை வெளிப்படுத்தி வருபவர் ராகுல் காந்தி. கடந்த வருடம் நிகழ்ச்சி ஒன்றிற்காக சிங்கப்பூர் சென்ற ராகுல்காந்தியிடம், ராஜீவ் படுகொலை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

My father was gentle, loving, kind & affectionate says Rahul Gandhi

அதற்கு ராகுல், "பல ஆண்டுகளாக நானும், என்னுடைய சகோதரியும் கோபத்துடன் கூடிய மனவேதனையில் சிக்கியிருந்தோம். ஆனால், தற்போது அவர்களை முழுவதுமாக மன்னித்து விட்டோம்" என்று உருக்கமாக சொல்லி இருந்தார்.

சமீபத்தில்கூட, வயநாடு தொகுதிக்குட்பட்ட திருநெல்லிக்கு பிரச்சாரத்துக்கு ராகுல் சென்றிருந்தார். அங்குள்ள தென்னகத்து காசி என அழைக்கப்படும் பாபனாசினி எனும் புனித நதி ஓடுகிறது. 28 வருடங்களுக்கு முன் ராஜீவ் காந்தியின் அஸ்தி இந்த நதியிலும் கரைக்கப்பட்டது. அங்கு சிறப்பு பூஜை செய்த ராகுல், சோகத்துடன், தந்தையின் நினைவுகளிலும் மூழ்கினார்.

இன்று ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. காலையிலேயே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி யமுனை நதிக் கரையில் அமைக்கப்பட்டுள்ள வீர் பூமி என்ற நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில், தனது தந்தை குறித்து ராகுல் காந்தி பெருமையுடன் ட்வீட் செய்துள்ளார். அதில், "என்னுடய தந்தை மென்மையானவர், அமைதியானவர். கனிவானவரும் அன்பானவரும் கூட. அனைவரையும் மதிக்கவும், அவர்கள் மீது அன்பு செலுத்தவும் கற்றுக் கொடுத்தவர். யாரையும் வெறுக்க கூடாது என்பதுடன், அனைவரையும் மன்னிக்கவும் கற்றுக் கொடுத்தவர். எனது தந்தையின் நினைவு நாளில், அவரை அன்புடனும், நன்றியுடனும் நினைத்து பார்க்கிறேன். அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+