கங்கனா ரணாவத்தை சண்டிகரில் ஏர்போர்ட்டில் அடித்தது ஏன்? பெண் காவலர் ஆவேசம்!
டெல்லி: விவசாயிகளுடன் எனது தாயாரும் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அப்போது விவசாயிகளை இழிவுபடுத்தும் விதமாக கங்கனா ரணாவத் பேசியதாக சண்டிகரில் அவரை அடித்த பெண் காவலர் ஆவேசமாக கூறியுள்ளார்.
சண்டிகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்ற போதுதான் குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கங்கனா ரனாவத்தை தாக்கினார். டெல்லியில் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நடத்திய போராட்டத்தில் பஞ்சாப் பெண்களும் பணத்திற்காகவே கலந்து கொண்டனர் என தரம் தாழ்ந்து பேசியதற்காக அந்த காவலர், கங்கனாவை அடித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கங்கனா ரணாவத்தை தாக்கியது ஏன் என்பது குறித்து ஆவேசமாக பெண் காவலர் குல்வீந்தர் கவுர் பேசியுள்ளார். இது தொடர்பாக கவுர் கூறியதாவது:- "விவசயிகள் 100 ரூபாய் வாங்கி கொண்டு அங்கே போராடிக்கொண்டு இருப்பதாக கங்கனா ரணாவத் பேசினார். கங்கனா ரணாவத் இவ்வாறு அறிக்கை வெளியிடும் போது எனது தாயார் அங்கே போராடிக்கொண்டு இருந்தார். விவசாயிகளை கங்கனா ரணவாத் அவமதித்துவிட்டார்" என்றார்.
முன்னதாக, சண்டிகர் விமான நிலையத்தில் தன்னை பெண் காவலர் தாக்கியது குறித்து கங்கனா வெளியிட்ட வீடியோவில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். கங்கனா ரணாவத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:- என்னை சண்டீகர் விமான நிலையத்தில் பெண் அதிகாரி தாக்கியதை அறிந்த என்னுடைய நலம் விரும்பிகள், மீடியாக்களிடம் இருந்து நான் எப்படி இருக்கிறேன் என கேட்டு எனக்கு செல்போன் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
நான் நலமாக இருக்கிறேன். சண்டீகர் விமானத்தில் இன்று மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் என்னை சோதனை செய்தனர். அப்போது அதை முடித்துக் கொண்டு நான் அங்கிருந்து நகர்ந்தேன். அப்போது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் என்னை அறைந்தார். என்னை அவதூறாக பேசினார்.
என்னை ஏன் அடித்தீர்கள் என நான் கேட்டதற்கு, அவர் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் செயல்படவில்லை என்பதால் அறைந்ததாக தெரிவித்திருந்தார். எப்படியோ நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன். ஆனால் எனது கவலை என்னவென்றால் பஞ்சாபில் அண்மைகாலமாக அதிகரித்து வரும் தீவிரவாதத்தையும் வன்முறையையும் எப்படி கையாள்வது என்பதுதான் என கங்கனா அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
சண்டீகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்ற போதுதான் குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கங்கனா ரனாவத்தை தாக்கினார். டெல்லியில் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நடத்திய போராட்டத்தில் பஞ்சாப் பெண்களும் பணத்திற்காகவே கலந்து கொண்டனர் என தரம் தாழ்ந்து பேசியதற்காக அந்த காவலர், கங்கனாவை அடித்ததாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில், தான் பெண் காவலரே கங்கனாவை அடித்தது ஏன் என்று கூறியுள்ளார். கங்கனா ரணாவத்தை தாக்கியது தொடர்பாக பெண் காவலர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications