நாகாலாந்து மாநிலத்தில் மீண்டும் மலர்ந்த தாமரை..பாஜக கூட்டணி ஆட்சி..காணாமல் போன காங்கிரஸ்
நாகாலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. கருத்துக்கணிப்புகள் பலித்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
டெல்லி: நாகாலாந்து மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி காணாமலேயே போய் விட்டது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலித்துள்ளதால் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நாகாலாந்து மாநிலத்தில், அகுலேடா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கஜேடோ கிமினி ஏற்கெனவே போட்டியின்றி வெற்றிபெற்றதையடுத்து, 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த தேர்தலில் பா.ஜ.கவும், தேசிய மக்கள் கட்சியும் இணைந்து சுயேச்சைகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தன.
நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதையடுத்து 59 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பாஜக கூட்டணி தொடர்ந்தது. தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 40 தொகுதிகளிலும் பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
தற்போதைய நிலவரப்படி, நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பாஜக கூட்டணி 35 தொகுதிகளை வென்றுள்ளது. என்பிஎஃப் கட்சி 2 தொகுதியை கைப்பற்றும் நிலையில், காங்கிரஸ் தற்போது எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை.
நாகாலாந்தின் அகுலுடோ தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றதால் பாஜக வேட்பாளர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 31 இடங்கள் போதும் எனும் நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 37 தொகுதிளில் வென்றுள்ளது. இதன் மூலம் பாஜக என்டிடிபி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. சுயேச்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர். ராம் விலாஸ் பஸ்வான் லோக் ஜனசக்தி கட்சி 2 இடங்களில் வென்றது. என்பிஎஃப் 2, என்பிபி 5, என்சிபி 6, அத்வாலேயின் இந்திய குடியரசுக் கட்சி 2 இடங்களிலும் வென்றது.
நாகாலாந்து மாநில தேர்தல் முடிவுகள்:
மொத்த தொகுதிகள் - 60
தேர்தல் நடைபெற்றவை- 60
முடிவுகள் அறிவிக்கப்பட்டவை- 56
பாஜக -12
சுயேட்சைகள் -4
லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) -2
நாகா மக்கள் முன்னணி- 2
தேசிய மக்கள் கட்சி- 5
தேசியவாத காங்கிரஸ் கட்சி- 6
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி - 23
குடியரசு கட்சி (அத்வாலே)- 2
முடிவுகள் அறிவிக்கப்படாதவை- முன்னிலை நிலவரம்
ஐக்கிய ஜனதா தள் -1
தேசியவாத காங்கிரஸ்- 1
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி -2
நாகாலாந்து மாநிலத்தில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பாஜக கூட்டணி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்தத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. இந்தத் தேர்தலில் 40 : 20 ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருகட்சிகளும் போட்டியிட்டன.
ஒருகாலத்தில் நாகாலாந்தை ஆண்ட கட்சியான காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க முடியாமல் தனித்து போட்டியிட்டது. 27 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை வந்த ராகுல்காந்திக்கு இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications