"அனுஷ்கா சர்மா கீ பதி கா நாம் கியா ஹை"! அமைச்சரின் சேட்டை பேச்சு! பேட்டி எடுத்தது ஒரு குத்தமாய்யா!
டெல்லி: "உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்" என கேட்டதற்கு நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா கொடுத்த காமெடியான பதில் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அவரை பயங்கரமாக கலாய்த்தும் வருகிறார்கள்.

நாகாலாந்து மாநில சுற்றுலா மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் டெம்ஜென் இம்னா. இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவர் "உங்களுக்கு எப்போதும் மிகவும் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்" என கேட்கப்பட்டது.
அதற்கு இம்னா, சற்றும் யோசிக்காமல் "எவர்கிரீன் வீரரான சச்சின் டெண்டுல்கர்" என்றாராம். இம்னாவிடம் மீண்டும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதில் "தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தவர் யார்?" என்ற கேள்வி வந்து விழுந்ததாம்.
அதற்கு இம்னா, "அனுஷ்கா சர்மா கீ பதி கா நாம் கியா ஹை (அனுஷ்கா சர்மாவின் கணவர் பெயர் என்ன)" என கேட்டுள்ளார். இது அந்த பேட்டி எடுத்தவருக்கு சிரிப்பை வரவழைத்தது. அந்த சிரிப்புடன் அந்த நெறியாளர் "விராட் கோஹ்லி" என்றாராம்.
உடனே இம்னா, "ஹா...ன் விராட் கோஹ்லி. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றாராம். அந்த குசும்பு பிடித்த நெறியாளர், "அப்படியென்றால் உங்களுக்கு மிகவும் பிடித்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாதானா, கரீனா கபூர் இல்லையா" என கேட்டுள்ளார்.
அதற்கு பதறிய இம்னா,"ஐய்யோ அப்படியெல்லாம் இல்லை. விராட் கோஹ்லியை, அனுஷ்கா சர்மா காதலித்தார் இல்லையா அது என் நினைவுக்கு வந்தது, அவ்வளவுதான்" என்றாராம். அமைச்சரின் இந்த நகைச்சுவையான பேட்டி வைரலாகி வருகிறது.இதை பார்த்தால் அனுஷ்கா மகிழ்ச்சியாக இருப்பார் என ஒரு நெட்டிசன் தெரிவித்தார். ஆண்கள் எப்போதும் ஆண்கள்தான் (Men Will be men) என இன்னொருவர் தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து அமைச்சர் இது போல் சமூகவலைதளங்களில் சிரிக்க வைப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்த போது மகேந்திர சிங் தோனியுடனான வீடியோவை இம்னா ஷேர் செய்திருந்தார்.
நாகாலாந்து அமைச்சர் இம்னாவுக்கு 44 வயதாகிறது. இவர் பாஜகவை சேர்ந்த அமைச்சராவார். இவரது நகைச்சுவை திறனால் மிகவும் பிரபலமடைந்தவர். சமூகவலைதளங்களில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது தனது மாநிலத்தை பற்றியும் நாகாலாந்து கலாச்சாரத்தை பற்றியும் இவர் போஸ்ட்களை போட்டு வருகிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications