ஒரு வழியாக மவுனம் கலைத்தார் ஜெனரல் நரவனே.. புத்தக சர்ச்சை குறித்து கொடுத்த மிக முக்கிய விளக்கம்
டெல்லி: நரவனே புத்தகம் குறித்து இப்போது தேசியளவில் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இதில் அவரே மவுனம் கலைத்துள்ளார். சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியாகவில்லை எனப் பென்குயின் பதிப்பகம் விளக்கம் கொடுத்திருந்த சூழலில், அதைப் பகிர்ந்து "இதுவே புத்தகத்தின் நிலை" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேவின் "ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி" (Four Stars of Destiny) புத்தகம் குறித்தே இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. அந்தப் புத்தகத்தில் இருக்கும் சில பகுதிகளை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குறிப்பிட முயன்றார். இருப்பினும், அது வெளியாகாத புத்தகம் என்பதால் அது பற்றிப் பேசக்கூடாது எனச் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இதை மையமாக வைத்துத் தொடர்ந்து அமளி நடந்து வருகிறது. இந்த புத்தகம் ஏற்கனவே வெளியாகிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். ஆனால், அதை மறுத்த பென்குயின் பதிப்பகம், இந்த புத்தகம் வெளியிடப்படவில்லை என விளக்கம் கொடுத்திருந்தது.
இது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நரவனே மவுனம் கலைத்துள்ளார். பெங்குயின் பதிப்பகத்தின் விளக்கத்தைப் பகிர்ந்த ஜெனரல் (ஓய்வுபெற்ற) நரவனே, "நிலைமை இதுதான்" என்று தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது அந்தப் புத்தகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும், அங்கீகரிக்கப்பட்ட பிரதிகள் எதுவும் புழக்கத்தில் இல்லை என்றும் பதிப்பகம் தெரிவித்ததை நரவனே முழுமையாக உறுதிப்படுத்தினார்.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications