ஷாக்கிங்.. பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் ஹிட் லிஸ்டில் நரேந்திர மோடி, அமித்ஷா பெயர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்க பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் ஹிட் லிஸ்டில் நரேந்திர மோடி, அமித்ஷா, அஜித் தோவலின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக அறிவித்துவிட்டது.

இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் ஆடிபோய்விட்டது. இந்த நிலையில் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புக்கு அண்மையில் ஒரு மர்ம கடிதம் வந்தது. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் அந்த கடிதத்தில் ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவை நீக்கியதற்கு இந்தியாவை பழித்தீர்ப்போம்.

தீவிரவாத அமைப்பு

தீவிரவாத அமைப்பு

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை தீர்த்து கட்ட திட்டமிட்டு வருகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு படையையே தீவிரவாத அமைப்பு தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

4 விமான நிலையங்கள்

4 விமான நிலையங்கள்

இது மட்டுமல்லாது ஜம்மு, பதான்கோட், அமிருதசரஸ், ஜெய்ப்பூர், காந்தி நகர், கான்பூர், லக்னோ உள்ளிட்ட 30 நகரங்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 4 விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கடிதத்தில் கூறப்படுகிறது.

உளவுத் துறை எச்சரிக்கை

உளவுத் துறை எச்சரிக்கை

இதையடுத்து மோடி, அமித்ஷா, அஜித் தோவல் ஆகியோருக்கு இந்திய உளவுத் துறை எச்சரிக்கை அளித்துள்ளது. பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் அவரை கொல்ல லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டம் தீட்டியது.

லஷ்கர் தீவிரவாதிகள்

லஷ்கர் தீவிரவாதிகள்

இதற்காக அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது வாரணாசியில் ஒரு தீவிரவாத முகாமையே அமைக்க திட்டம் தீட்டியிருந்தது. உளவுத் துறை தகவலின்படி, வாரணாசியில் ஒரு பெரும் தாக்குதலை நடத்த லஷ்கர் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+