கெத்து நடை போட்டு கட்சி ஆபீஸ் வந்த மோடி, அமித்ஷா.. ரோஜா மலர் தூவி 'ஹீரோ வெல்கம்' கொடுத்த தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பளித்தனர்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

Narendra Modi, Amit shah gets hero welcome

இதனால் நாடு முழுக்க பாஜக தொண்டர்கள், உற்சாகத்தோடு, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல தலைநகர் டெல்லியில், பாஜக தொண்டர்கள், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆயிரக்கணக்காக குவிந்து, மோடி மற்றும் அமித் ஷாவுக்கு ஆதரவாக, வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

இரவு சுமார் 7 மணியளவில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவரும், பாஜக தலைமை அலுவலகம் வருகை தந்தனர். அப்போது சுற்றிலும் நின்ற, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவர்கள் மீது ரோஜா பூக்களை தூவி, ஹீரோ வெல்கம், என்ற வகையில் வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்களைப் பார்த்து சிரித்தபடி, கையை அசைத்தபடி சென்றனர். அப்போது இருவரும் கெத்தாக ஒரு நடை போட்டார்களே பார்க்கனும். போரில் வென்ற மன்னர்களை போல அவர்கள் உடல் மொழி இருந்தது. அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் குவிந்திருந்தனர். இதையடுத்து பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில், அமித்ஷா உரையாற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+