நேருவிற்கு பிறகு.. இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராகும் ஒரே தலைவர் மோடி
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியமைக்க தேவையான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நேருவுக்கு பிறகு இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராகும் ஒரே தலைவர் என்கிற பெருமையை மோடி பெற உள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்த நிலையில், இன்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
தற்போதுவரை 290 தொகுதிகளில் பாஜக வெற்றி முகத்துடன் இருக்கிறது. எனவே மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். இதன் மூலம் நேருவுக்கு பிறகு இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராகும் ஒரே தலைவர் என்கிற பெருமையை மோடி பெற இருக்கிறார்.
இந்தியாவின் வரலாற்றை பொறுத்த அளவில், 1947 தொடங்கி 1952 வரை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு இருந்தார். காங்கிரஸ் கட்சியால் அவர் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 1952 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 1957 வரை இரண்டாவது முறையும் நேரு பிரதமராக பதவி வகித்தார். இந்த காலத்தில் பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தினார்.
இதற்கு அடுத்து 1957ல் நடந்த லோக்சபா தேர்தல்களிலும் நேரு வெற்றி பெற்றார். அடுத்த 5 ஆண்டு காலத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளியுறவுக் கொள்கையில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். பின்னர் 1962ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் நேரு வெற்றி பெற்றார். ஆனால், அவரது உடல்நிலை சரிவை சந்திக்க தொடங்கியது. இறுதியாக 1964ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி நேரு உயிரிழந்தார். அவர் மறையும் வரை பிரதமராகவே தொடர்ந்தார்.
இந்திரா காந்தியும் கூட 3 முறை பிரதமராக இருந்திருக்கிறார். ஆனால் நேருவை போல தொடர்ந்து இருந்ததில்லை. 1966ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரியின் மறைவை தொடர்ந்து, 1967ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று இந்திரா காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
அதன் பின்னர் 1971ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சியை பிடித்தார். இந்த சமயத்தில் இவர் கடும் நெருக்கடியை சந்தித்திருந்தார். 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போர் நடைபெற்றது. பின்னர் வங்கதேசம் உருவாக்கப்பட்டது. இப்படியாக 1975ல் எம்ர்ஜென்சியை கொண்டு வந்தார்.
கடைசியாக 1980ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். இந்த காலத்தில் காலிஸ்தான் பிரச்னை மற்றும் இலங்கை பிரச்னை என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தார். இறுதியாக 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி அவர் தனது சொந்த பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக, தற்போது நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications