100வது நாளில் மோடி அரசு.. செப்.7 முதல் அதிரடி சரவெடிதான்.. பலே பிளான்கள்
Recommended Video
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, புதிய அரசு அமைந்து வரும் 7ஆம் தேதியுடன் நூறாவது நாள் நிறைவடைவதை ஒட்டி, பிரம்மாண்ட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு பாஜகவும், மத்திய அரசும் ஏற்பாடு செய்துள்ளன.
இவ்வாண்டு நடைபெற்ற 17-வது லோக்சபாத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது. மறுபடியும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.

மோடி அரசு அமைந்து, செப்டம்பர் 7ம் தேதியுடன், 100 நாட்கள் நிறைவடைகிறது. இதை மிக பிரமாண்டமாக கொண்டாட, பாஜகவும், மத்திய அரசும் திட்டமிட்டுள்ளன.
இதையொட்டி, மூத்த அமைச்சர்கள், வரும் 7ம் தேதி பத்திரிக்கைகளுக்கு எடிட்டோரியல் எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த எடிட்டோரியல் மறுநாள் முன்னணி பத்திரிகைகளில் வெளியாக உள்ளன.
செப்டம்பர் 8ம் தேதி மத்திய அரசின் சாதனைகள் தொடர்பாக பிரஸ் மீட் நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர்களும், பாஜக மூத்த தலைவர்களும் பல்வேறு நகரங்களில் அன்று செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்துவார்கள்.
11ஆம் தேதி முதல், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு, 'மக்கள் சேவை வாரம்' கடைபிடிக்கப்பட உள்ளது. மோடியின் பிறந்த நாள் செப்டம்பர் 17ம் தேதியாகும்.
பொருளாதார சரிவு விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், 100 நாள் கொண்டாட்ட, விழாவை பிரமாண்டமாக நடத்தி, மக்கள் மற்றும் தொண்டர்களின் கவனத்தை அதை நோக்கிக் கொண்டு செல்லலாம் என்பது பாஜகவில் உள்ள சில தலைவர்களின் திட்டமாக உள்ளதாம்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications