அரசியல் கணிப்புகளை பொய்யாக்கியது ஏழைகள் ஓட்டு- மோடி பேச்சு Live

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் பெற்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு முதல் முறையாக தனது தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இன்று காலை 9.55 மணிக்கு வாரணாசி வருகை தந்த பிரதமர் மோடிக்கு உ.பி. பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலுக்கு செல்லும் மோடி, பிறகு வாரணாசியில் ரோடு ஷோ நடத்துகிறார்.

பிரதமர் ரோடு ஷோவில் பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதால், வாரணாசி தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான லைவ் அப்டேட்டுகளுக்கு, இந்த பக்கத்தில், இணைந்திருங்கள்.

May 27, 2019, 1:24 pm IST

வாரணாசி

இந்தியாவிலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்துள்ளது பாஜக. நமது முன்னோர்கள் உலகிற்கான பாதையை காட்டியுள்ளனர். அதை புதுப்பித்து, பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்- மோடி பேச்சு
May 27, 2019, 12:58 pm IST

வாரணாசி

வாரணாசி நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் மோடி உரை. அரசியல் பண்டிதர்களின் கணிப்புகளையெல்லாம், ஏழை எளிய மக்களின் ஓட்டுக்கள் பொய்யாக்கிவிட்டன- மோடி பேச்சு
May 27, 2019, 12:58 pm IST

வாரணாசி

இந்த நாட்டுக்கே நான் பிரதமராக இருந்தாலும், வாரணாசி வாக்காளர்களுக்கு நான் ஒரு பணியாளர்தான். உங்களது உத்தரவுக்குத்தான் நான் முன்னுரிமை அளிப்பேன் - மோடி பேச்சு
May 27, 2019, 12:31 pm IST

வாரணாசி

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் துவங்கியது. பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் பங்கேற்பு
May 27, 2019, 11:05 am IST

வாரணாசி

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி. பாஜக தலைவர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வழிபாட்டில் பங்கேற்பு
May 27, 2019, 10:55 am IST

காசி விஸ்வநாதர் ஆலயம் வந்தார் மோடி. சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்கிறார். கோவில் வரும் வழிநெடுக கூடியிருந்த மக்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
May 27, 2019, 10:19 am IST

வாரணாசி:

வாரணாசி வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
May 27, 2019, 10:19 am IST

வாரணாசி:

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் நடத்தும் ரோடு ஷோவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது
May 27, 2019, 10:18 am IST

வாரணாசி:

பிரதமர் மோடி வருகையையொட்டி, வாரணாசியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

Narendra Modi in Varanasi- Live updates
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+