Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டணியை "மகிழ்ச்சியாக" வைக்கும் வழி மோடிக்கு தெரியும்- யோகேந்திர யாதவ் சூசகம்! எதை சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோடி முதல்முறையாகக் கூட்டணி அரசுக்குத் தலைமையேற்கும் நிலையில், இது தொடர்பாக லோக்சபா தேர்தல் முடிவுகளைத் துல்லியமாகக் கணித்த தேர்தல் வியூக வல்லுநர் யோகேந்திர யாதவ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றே பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் வந்திருந்தன. பல தேர்தல் வல்லுநர்களின் கணிப்பும் அதுவாகவே இருந்தது.

Yogendra Yadav lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics

ஆனால், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர் எதிராகவே இருந்தது. சிலர் பாஜக 300 இடங்களுக்கு மேல் பெறும் என்று கூட கூறிய போதிலும் பாஜகவால் தனிப்பெரும்பான்மையைக் கூடப் பெற முடியவில்லை.

மோடி: இந்த முறை லோக்சபா தேர்தலில் பாஜகவால் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையை விட 32 சீட் குறைவாகும். இதையடுத்து தெலுங்கு தேசம் மற்றும் ஜேடியு கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி அரசு பதவியேற்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

இருப்பினும், பிரதமர் மோடி கூட்டணிக்குத் தலைமையேற்பது இதுவே முதல்முறையாகும். நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போதும் சரி, பிரதமராகக் கடந்த 10 ஆண்டுகள் இருந்த போதும் பாஜக பெரும்பான்மையைப் பெற்றே இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. அவர் முதல்முறையாக ஒரு கூட்டணி அரசுக்குத் தலைமை ஏற்க இருக்கிறார்.

துல்லியமாகக் கணித்த யோகேந்திர யாதவ்: இதற்கிடையே தேர்தல் முடிவுகளை மிகத் துல்லியமாகக் கணித்த தேர்தல் வியூக வல்லுநர் யோகேந்திர யாதவ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மோடியால் எந்தவொரு சூழலுக்கும் ஏற்ப தகவமைத்துக் கொள்ள முடியும் என்ற அவர் கூட்டணியை மகிழ்ச்சியாக வைத்திருக்க பல்வேறு வழிகள் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், "நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இருக்கும் கூட்டணி அரசை பிரதமர் மோடியால் சமாளிக்க முடியுமா.. ஏனென்றால் மோடி இதுபோன்ற சவாலை இப்போது தான் முதல்முறையாக எதிர்கொள்கிறார்" என்ற கேள்வியை ஒருவர் முன்வைத்தார்.

என்ன சொன்னார்: அதற்குப் பதிலளித்த யோகேந்திர யாதவ், "ஆம்.. நிச்சயம் அது மோடிக்குக் கடினமாகவே இருக்கும். கூட்டணி ஆட்சி என்பதால் மட்டும் கடினமாக இருக்கும் என நான் சொல்லவில்லை.. மோடிக்கு அடிப்படையிலேயே ஜனநாயகத்தில் பழக்கம் இல்லை. அவரது கட்சியிலும் சரி வெளியேயும் சரி மன ரீதியாகவே அவர் ஜனநாயகத்திற்கு ஏற்றவர் இல்லை.

ஆனால், அவரது அரசியல் திறமையை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்றே நினைக்கிறேன். அவர் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வார். தெலுங்கு தேசமும் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி ஆட்சிக்கு வரும்பட்சத்தில் அவர்கள் தங்கள் கொள்கைகளில் அவர்கள் உறுதியாகவே இருப்பார்கள் என்பதே எனது புரிதல். எனது இந்த அனுமானம் தவறாகப் போகலாம்.

பல வழிகள் இருக்கு: ஒரு கூட்டணியை மகிழ்ச்சியாக வைத்திருக்கப் பல வழிகள் இருக்கிறது. அதில் சிலவற்றைப் பற்றி என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால், அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். நரேந்திர மோடியால் அதைச் செய்ய முடியும்" என்று அவர் தெரிவித்தார். யோகேந்திர யாதவின் இந்தப் பதில் இணையத்தில் வேமகாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+