மீண்டும் பிரதமரானார் மோடி.. உலகத் தலைவர்கள் முன்னிலையில் பதவியேற்பு
Recommended Video
டெல்லி: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இன்று மீண்டும் பதவியேற்றார். மோடியுடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. பிரதமராக பதவியேற்ற மோடிக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களை அள்ளியுள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

மீண்டும் பாஜக
இந்த மாபெரும் வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கிறது பாஜக.

முதல்முறை
பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் அல்லாத கட்சியை சேர்ந்தவர் ஒருவர் இரண்டாவது முறையாக பிரதமர் ஆவது இதுவே முதல் முறையாகும்.

பதவிப்பிரமாணம்
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். மோடியுடன் அவரது அமைச்சரவையும் இன்று பதவி ஏற்கிறது.

பல்வேறு நாட்டு தலைவர்கள்
மோடியின் பதவியேற்பு விழாவில் நேபாளம், மொரிஷியஸ், மற்றும் பூட்டான் ஆகிய அண்டை நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்றனர். தாய்லாந்தில் இருந்து சிறப்பு பிரதிநிதி பங்கேற்றார். இதேபோல் வங்கதேசம், இலங்கை, மியான்மர், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

அமைச்சரானார் அமித்ஷா
மோடியின் அமைச்சரவையில் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும், கடந்த முறை அமைச்சர் பதவியில் இருந்தவர்களும் பல புது முகங்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய தலைவரான அமித் ஷாவும் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications