டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் அரியாசனம்.. 30ம் தேதி பதவியேற்பு .. குடியரசுத் தலைவர் மாளிகை

Google Oneindia Tamil News

டெல்லி: 30ம் தேதி பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்க உள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

Narendra Modi to take oath as PM on 30th May at 7pm, at Rashtrapati Bhavan delhi

நேற்று பாஜக கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகை ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நரேந்திர மோடி வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7மணிக்கு மோடி பிரதமராக பதவியேற்கும் விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அமைச்சர்களும் மோடியுடன் பதவியேற்கிறார்கள். பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் இதேபோல் அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்

1971ல் இந்திரகாந்திக்கு பிறகு சாதித்த மோடி.. 48 வருடத்துக்குபின் பாஜக வரலாற்று வெற்றி 1971ல் இந்திரகாந்திக்கு பிறகு சாதித்த மோடி.. 48 வருடத்துக்குபின் பாஜக வரலாற்று வெற்றி

பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்கிறார்கள். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

புதிய அமைச்சர்வையில் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்கள் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

English summary
Narendra Modi to take oath as PM on 30th May at 7pm, at Rashtrapati Bhavan. Members of Union Council of Ministers to also take oath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X