உச்ச கட்ட போர் பதற்றம்.. பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள் திடீர் மீட்டிங்! ஆலோசித்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய எல்லையோர பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதனை இந்திய ராணுவம் முறியடித்த நிலையில் எல்லையோர மாநிலங்களில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையை உன்னிப்பாக இந்திய ராணுவம் கண்காணித்து வரும் நிலையில் பிரதமர் மோடியை முப்படை தளபதிகள் சந்தித்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் உச்சத்தில் உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.

narendra-modi-within-a-gap-of-days-meets-the-three-service-chiefs-yet-again-on-today

பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த முயற்சிகளை எல்லையில் அரண் போல பாதுகாத்து நிற்கும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. பாகிஸ்தானின் அடாவடி நடவடிக்கையால் எல்லையில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இத்தகைய பரபரப்பான சூழலை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள் இன்று சந்தித்து பேசினர். கடந்த சில தினங்களுக்கு முன்பாகத்தான் பிரதமர் மோடியை முப்படைகளின் தளபதிகள் சந்தித்து பேசியிருந்த நிலையில், இன்று மீண்டும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது பாகிஸ்தானின் அத்துமீறிய செயலுக்கு பதிலடி கொடுப்பது, இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+