நாடு முழுக்க 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.. நிதி அமைச்சர் நிர்மலா அறிவிப்பு!
நாடு முழுக்க 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: நாடு முழுக்க 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார். இதையடுத்து இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார். மூன்றாவது நாளாக இன்று பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், நாடு முழுக்க கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த அனைத்து விதமான கால்நடைகளுக்கும் 100% தடுப்பு மருந்து இடப்படும். இதற்கான பெரிய அளவில் மருத்துவ குழு களமிறக்கப்படும். பிரதமர் மோடி இதில் நேரடியாக ஆர்வம் செலுத்தி உள்ளார்.
அதனால் இந்த பணிகள் உடனே தொடங்கப்படும். இதுவரை 1.5 கோடி மாடுகள் மற்றும் எருமைக்கு மருந்து போடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுக்க 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும். கால்நடைகளுக்கு அடிக்கடி ஏற்படும் வாய் மற்றும் கால் சார்ந்த நோய்களை தடுக்கும் வகையில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த பணிகள் தொடர்ந்து செய்யப்படும்.
இதன் மூலம் நாடு முழுக்க பால் உற்பத்தி அதிகரிக்கப்படும். ஆகவே பால் உற்பத்தித் துறையில் சுமார் 15,000 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளன. தொடர்ந்து இதற்கு நிதி அளிக்கப்படும்.
பால் - நெய் உற்பத்தி மற்றும் பால் சார்ந்த பொருள் உற்பத்தி இதன் மூலம் அதிகரிக்கும். இதை ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பால், வெண்ணெய் போன்ற பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய முன் வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இதை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications