அதிகரித்த கட்சித் தாவல்... எந்தெந்த கட்சிகளுக்கு அதிக இழப்பு... அனல் பறக்கும் ஆய்வறிக்கை..!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணையும் நிகழ்வு கடந்த 7 ஆண்டுகளில் தான் அதிகரித்துள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் மற்றும் ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

1,133 வேட்பாளர்களின் தேர்தல் படிவத்தை வைத்தும் 500 எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் தேர்தலில் போட்டியிடும் மனுக்களை கொண்டும் இந்த ஆய்வை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் குறிப்பாக மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் 222 காங்கிரஸ் வேட்பாளர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு சென்றுள்ளதாகவும் அதில் பாஜகவில் இணைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

national election observation and democratic reforms release report about party tab

இந்தியா முழுவதும் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் வேட்பாளர்கள் பலரும் பாஜகவில் இணைந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே காங்கிரஸ் கட்சிக்கு தான் மிகுந்த இழப்பு என்றும் கடந்த 7 ஆண்டுகளில் எண்ணற்ற பல முக்கிய தலைவர்களை, உள்ளூர்களில் செல்வாக்கு படைத்தவர்களை காங்கிரஸ் இழந்துள்ளதாக ஆய்வு முடிவு கூறுகிறது.

இதனிடையே கடந்த 7 ஆண்டுகளில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 177 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியுள்ளதாகவும், இதேபோல் பாஜகவை சேர்ந்த 33 எம்.எல்.ஏ.க்கள் இதுவரை மாற்றுக் கட்சிகளுக்கு சென்றுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 399 தலைவர்களை காங்கிரஸ் கட்சி கடந்த 7 ஆண்டுகளில் இழந்துள்ளதாகவும் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 115 முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே காங்கிரஸில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அதிகமான உள்ளூர் தலைவர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் கட்சித் தாவல் நடவடிக்கையால் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாஜ்வாடி கட்சியில் 60 முக்கியப் பிரமுகர்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 31 முக்கியப் பிரமுகர்களும் மாற்றுக்கட்சிகளில் இணைந்து தங்கள் தலைமைக்கு அதிர்த்தி கொடுத்ததாக அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை பார்க்கும் போது நடிகர் கவுண்டமணியின் ''அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா'' என்ற நகைச்சுவை வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+