கங்கையை சுத்தம் செய்ய ரூ.33000 கோடி செலவு! என்ன பயன்? குளிக்க தகுதியில்லை என பசுமை தீர்ப்பாயம் பளிச்
டெல்லி: கங்கை நதியை சுத்தம் செய்ய கடந்த 38 ஆண்டுகளில் ரூ.33,000 கோடி செலவு செய்யப்பட்டும் அதனால் எந்த பயனும், முன்னேற்றமும் இல்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கங்கை நதியில் குளிக்கக் கூட தகுதியில்லாத வகையில் நீர் மாசுப்பட்டிருப்பதாகவும், இந்தப் போக்கு நீடித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க நேரிடும் எனவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கங்கை நதியியில் நாளொன்றுக்கு 258.67 மில்லியன் லிட்டர் கழிவு நீரானது கலப்பதாக பசுமைத் தீர்ப்பாயம் மிகத் தெளிவாக அடிக்கோடிட்டு சுட்டிக்காட்டியிருக்கிறது.

கங்கை நதி பாயும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் மாசுபாட்டை தடுத்து கட்டுப்படுத்துவது உரிய விவகாரங்களை பசுமை தீர்ப்பாயம் கவனித்தில் கொண்டு விசாரித்து வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் கங்கை நதி மாசுபட்டிருப்பது குறித்து கடும் அதிருப்தியை பதிவு செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் கழிவுநீரை சுத்திகரிக்க உரிய வசதிகள் அமைக்கப்படவில்லை எனக் கூறியுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம்,
மேற்கு வங்கத்தின் 9 மாவட்டங்களில் கங்கை நதி பாயும் நிலையில் எந்த மாவட்டத்திலும் மாசுபாட்டை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ள பசுமை தீர்ப்பாயம், இந்த நிலையே தொடருமானால் சுற்றுச்சூழல் இழப்பீடு அபராதம் விதிப்பதை தவிர வேறு வழியே தெரியவில்லை என பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நோக்கில் கடந்த 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கங்கை செயல் திட்டத்தின் 2014ல் நமாமி கங்கை திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு கங்கை நதியை தூய்மைப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த மோடி, அதனை நிறைவேற்ற அறிவியல் பூர்வமான முறையில் நமாமி கங்கை செயல் திட்டத்தை கொண்டு வந்தார்.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் கடந்த 1986ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 20,000 கோடி ரூபாய் கங்கையை சுத்தப்படுத்த செலவு செய்யப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2022 வரை 13,000 கோடி ரூபாய் கங்கை நதி தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் கங்கை நதியை சுத்தம் செய்ய ரூ.33,000 கோடி செலவு செய்யப்பட்டும் அதனால் எந்த பயனும், முன்னேற்றமும் இல்லை என்பது தான் பசுமை தீர்ப்பாயத்தின் கருத்தாக உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications