சோனியா - ராகுலுக்கு 7 ஆண்டு சிறை? நேஷனல் ஹெரால்டு வழக்கு ED குற்றப்பத்திரிகையின் திடுக் பின்னணி
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகை குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சோனியா காந்தி முதல் குற்றவாளியாகவும், ராகுல் காந்தி 2வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை நிரூபித்தால் இருவருக்கும் 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட் ஜர்னல்ஸ் என்ற நிறுவனம் மூலம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. அதன்பிறகு காங்கிரஸ் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது. அதோடு அசோசியேட்ஸ் ஜர்னல்ஸ் நிறுவனத்தை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கைப்பற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பிறகு வருமான வரித்துறை விசாரணையை தொடங்கியது. அப்போது சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரணைக்குள் நுழைந்தது.
விசாரணையில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் சட்டவிரோதமாக ‛யங் இந்தியா' என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ‛யங் இந்தியா' நிறுவனத்தின் பங்கில் 76 சதவீதம் என்பது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் உள்ளது. சோனியா காந்தி 38 சதவீத பங்கையும், ராகுல் காந்தி 38 சதவீத பங்கையும் வைத்துள்ளனர். இதனால் பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு தொடர்பான சோனியா காந்தி, ராகுல் காந்தியின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அமலாக்கத்துறை தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த குற்றப்பத்திரிகையில், ‛‛நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் வெளியிட்டு வந்தது. இந்த நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் குற்ற சதி செய்துள்ளனர். அதன்பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தங்களின் ‛யங் இந்தியா' நிறுவனத்துக்கு அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கைப்பற்றி உள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ‛‛தற்போது இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு என்பது உயர்ந்துள்ளது. அதன்படி ரூ.5 ஆயிரம் கோடியாக சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி குற்றப்பத்திரிகையில் சோனியா காந்தி முதல் குற்றவாளி என்றும், ராகுல் காந்தி 2வது குற்றவாளி'' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டப்பிரிவு (PMLA) 4வது பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கான சிறை தண்டனை என்பது அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது சோனியா காந்தி, ராகுல் காந்தி மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications