இன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. மக்கள் ஊரடங்கை விட கடுமையானது: மோடி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மார்ச் 24ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் பரவிவரும் நிலையில் இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது இந்த அதிரடி அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

மோடி அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்:
கொரோனாவை தடுப்பதற்கு மூன்று வார கால சமூக விலகல் என்பது மிக முக்கியமானது. ஒவ்வொரு இந்தியரின் உயிரும் எனக்கு முக்கியம். எனவே உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன், 21 நாட்கள் இந்த சமூக விலகலை நீங்கள் பின்பற்றுங்கள்.
- யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்
- 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்
- இந்த ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை அறிந்துள்ளேன்
- பொருளாதாரம் பாதித்தாலும், நாட்டு மக்களின் உயிர்தான் எனக்கு முக்கியம்
- இந்த 21 நாட்கள் நாம் சுய ஒழுங்கைக் கடைபிடிக்காவிட்டால் 20 ஆண்டுகளுக்கு நாம் பின்னோக்கி சென்று விடுவோம்
- தனித்து இருப்பதை தவிர தப்பிப்பதற்கு வேறு வழி கிடையாது
- சீனா, அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகள் சமூக விலகலை, சரிவர பின்பற்றாததா தான் சிரமப்படுகின்றன. அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம் நாம் கொரோனாவைத் தடுக்கலாம்
- கொரோனா பரவத் தொடங்கினால் அதை தடுத்து நிறுத்துவது மிகப்பெரிய சவால் ஆகிவிடும்
- நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம், உங்கள் விருந்தினர் உள்ளிட்ட யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்கவும் வேண்டாம்
- இப்போது கடைபிடிக்கப்போகும் ஊரடங்கு என்பது, மக்கள் ஊரடங்கு (ஜனதா ஊரடங்கு) விடவும் கடுமையானதாக இருக்கும்.
- மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கிராமங்கள் உள்ளிட்ட அனைத்தும் லாக்டவுன் செய்யப்படும். இவ்வாறு, நரேந்திர மோடி தெரிவித்தார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications