நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை.. எனக்கும் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்.. நவீன் ஜிந்தால் புகார்
டெல்லி: எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல்கள் வருவதால் எனது முகவரியை யாரும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டாம் என பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நவீன் ஜிந்தால் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக பதவி வகித்து வந்தவர் நுபுர் சர்மா. இவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஞானவாபி வழக்கு குறித்து விவாதத்தில் கலந்து கொண்டார்.
Recommended Video
அப்போது அவர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் மோசமான கருத்துகளை நுபுர் சர்மா தெரிவித்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

நுபுர் சர்ச்சை
நுபுரின் சர்ச்சை கருத்துகளை டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிந்தால் ஆதரித்திருந்தார். இவருக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பாஜகவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில் நுபுர் சர்மாவும் நவீன் ஜிந்தாலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

கொலை மிரட்டல்
இந்த நிலையில் நவீன் ஜிந்தாலுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் சமூகவலைதளங்களில் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.

ஜிந்தாலுக்கு கொலை மிரட்டல்
எனவே எனது முகவரியை எல்லோரும் பார்க்கும் படி செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ட்வீட்டை டெல்லி போலீஸுக்கும் டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் அனுப்பி வைத்துள்ளார். பாஜகவிலிருந்து நுபுர் சர்மாவும் நவீன் ஜிந்தாலும் நீக்கப்பட்ட லெட்டர் பேடில் அவர்களுடைய. முகவரி இருந்தது.

கட்சியின் கருத்து அல்ல
அதை சில மீடியாக்கள் பகிரங்கமாக வெளியிட்டன. இந்த நிலையில் நவீன் ஜிந்தாலின் கோரிக்கையை ஏற்று ஏஎன்ஐ உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் அவர்களுடைய முகவரி அடங்கிய ட்வீட்டுகளை டெலிட் செய்துள்ளன. முன்னதாக நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிந்தாலின் கருத்துகள் கட்சியின் கருத்து அல்ல என பாஜக தலைமை தெளிவுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications