பாஜகவிற்கு எதிராக ஒரே அணி...நிதிஷ் குமாருக்கு’ஷாக்’ கொடுத்த நவீன் பட்நாயக்..இப்படி சொல்லிட்டாரே
டெல்லி: வரும் மக்களவை தேர்தலில் தனித்தே பிஜூ ஜனதா தளம் கட்சி போட்டியிடும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். நவீன் பட்நாயக்கின் இந்த அறிவிப்பு, தேசிய அளவில் பாஜகவிற்கு மாற்றாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ்குமாரின் முயற்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. சொல்லப்போனால் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு ஆண்டுதான் இருக்கிறது. வரும் மக்களவை தேர்தலில் மத்தியில் கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

எதிர்க்கட்சிகள் தனித்தனியாக செயல்பட்டால் மோடியை வீழ்த்துவது கடினம் என்று கருதும் எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வருகின்றன. இதற்கான முயற்சிகளில் மம்தா பானர்ஜி , தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக நிதிஷ் குமார் சமீப நாட்களாக எதிர்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் மேற்கு வங்காள முதல்வர், மம்தா பானர்ஜி , மகராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அரசியல் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசியிருக்கலாம் என கருதப்பட்டது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைக்கும் தனது திட்டம் குறித்தும் நவீன் பட்நாயக்கிடம் நிதிஷ் குமார் பேசியிருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைந்து செயல்படும் திட்டம் தனக்கு இல்லை என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். நவீன் பட்நாயக்கின் இந்த முடிவு, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ் குமாரின் முடிவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்த நவீன் பட்நாயக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, தேர்தலில் நீங்கள் தனித்துதான் போட்டியிட போகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த நவீன் பட்நாயக், எப்போதுமே இதுதான் திட்டம். புரி விமான நிலையத்தில் நான் பிரதமர் மோடியை சந்தித்தேன். சாத்தியமான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி கூறினார். டெல்லியில் நான் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக்க போவது இல்லை" என்றார்.
முன்னதாக நிதிஷ்குமாரை சந்தித்த பிறகு நவீன் பட்நாயக் டெல்லி சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது வரும் மக்களவை தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம் என்று நவீன் பட்நாயக் கூறியிருக்கிறர்.
நவீன் பட்நாயக்கை பொறுத்தவரை பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே பல விவகாரங்களில் எடுத்து இருக்கிறார். குறிப்பாக முக்கிய மசோதாக்களுக்கு மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதோடு, எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டங்களையும் கடந்த காலங்களில் புறக்கணித்தே வந்துள்ளார்.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஷாக்கில் அதிமுக! விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அந்த சரவணனா? பாஜக விஐபிகள் போட்ட மெகா ஸ்கெட்ச் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications