நீட் PG கொஸ்டின் பேப்பரே இன்னும் ரெடியாகல.. டெலிகிராமில் லீக்? தேர்வு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு!
டெல்லி: நீட் முதுநிலை தேர்வுக்கான வினாத்தாள் வெளியாகவில்லை என்றும், டெலிகிராம் வலைதளத்தில் முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பரவி வரும் தகவல் பொய்யானது என்றும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் PG தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் முதுநிலை தேர்வுஅறிவிப்பை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்தது.

ஆனால், நீட் முதுநிலை தேர்வு நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவு திடீரென நீட் முதுநிலை தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. நீட் இளநிலை தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் எழுந்ததன் காரணமாக நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ல் நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்தது. வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று நீட் முதுநிலை தேர்வு, காலை, மதியம் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 2 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவ மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. 'NEET PG Leaked Materials’ என்ற பெயரில் டெலிகிராம் சேனல் செயல்படுவதாகவும், அதில் ரூபாய் 70,000 வரை நீட் பிஜி வினாத்தாளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான ஸ்கிரீன்ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவின.
மீண்டும் பூகம்பம்.. நீட் முதுநிலை தேர்வு வினாத்தாள் ரூ.70,000க்கு விற்பனை.. டெலிகிராமில் அதிர்ச்சி!
டெலிகிராம் செயலியில் இதுபோல் பல சேனல்களில், நீட் வினாத்தாள் கிடைக்கும் என்ற தகவல்கள் பகிரப்பட்டு வருவது, முறையாக தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நீட் முதுநிலை தேர்வை நடத்தும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளது தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம்.
நீட் வினாத்தாள் கசிவு என்ற தகவல் தவறானது என்றும், டெலிகிராம் சமூக வலைதளத்தில் நீட் முதுநிலை தேர்வு வினாத்தாள் வெளியாகவில்லை என்றும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் விளக்கம் தேர்வர்கள் போலி செய்திகளை நம்ப வேண்டாம் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், நீட் முதுநிலை தேர்வுக்கான வினாத்தாள்கள் இன்னும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தால் தயாரிக்கப்படவே இல்லை என்றும், நீட் வினாத்தாள் விற்பதாக கூறி யாராவது தேர்வர்களை தொடர்பு கொண்டால் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications