மோடிக்காக பூங்கொத்து கூட வாங்காத தலைவர்கள்! ஒரே பூங்கொத்தை மாற்றி மாற்றி கொடுத்த பரிதாபம்
டெல்லி: 3வது முறையாக நாளை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இதையொட்டி நேற்று பாஜக கூட்டணி கட்சி எம்பிக்களின் கூட்டம் நடந்தது. இதில் ஒரே பூங்கொத்தை வைத்து தலைவர்கள் மாற்றி மாற்றி மோடியை வாழ்த்தியது பேசுப்பொருளாகி உள்ளது.
மத்தியில் தனித்து ஆட்சியமைக்க 272 எம்பிக்கள் வேண்டும். ஆனால் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜக 240 தொகுதிகளில் வென்றுள்ளது. இதனால் மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைய உள்ளது.

பாஜகவிடம் 240 எம்பிக்கள் உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளில் இருக்கும் 52 எம்பிக்களின் உதவியுடன் பிரதமராக நாளை மோடி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா நாளை இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. ஜனாதிபதி திரெளபதி, நரேந்திர மோடிக்கு பிரதமராக பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில் பிரதமர் மோடிக்கு பாஜக எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட கூட்டணி கட்சி எம்பிக்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். அப்போது அவர்கள் ஒரே பூங்கொத்தை மாற்றி மாற்றி கொடுத்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். அதாவது பிரதமர் மோடிக்கு ஒருவர் பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து தெரிவிக்கிறார். அந்த பூங்கொத்தை மோடி தனக்கு பின்னால் இருக்கும் டேபிளில் வைக்கிறார்.
ஆனால் அந்த பூங்கொத்தை உடனடியாக மற்றவர்கள் கையில் எடுத்து மாற்றி மாற்றி பிரதமர் மோடிக்கு கொடுக்கின்றனர். அதோடு சிலருக்கு மோடியின் மெய்க்காப்பாளர்களே அந்த பூங்கொத்தை எடுத்து கொடுத்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி பேசும் பொருளாகி உள்ளது. அதோடு இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் அந்த வீடியோவின் பின்னணி பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
அதாவது நேற்று பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் பாஜக கூட்டணி கட்சி எம்பிக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையேற்று இருந்தார். கூட்டத்துக்கு வந்த அவர் முதலில் அரசியலமைப்பு புத்தகத்தை வணங்கினார். அதன்பிறகு அவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பிறகு கூட்டத்தின் முடிவில் என்டிஏ தலைவர்கள், எம்பிக்கள் மோடியை வாழ்த்தினர். அப்போது சில தலைவர்கள் மட்டும் பூங்கொத்து எடுத்து சென்று மோடியை வாழ்த்தினர். அதன்பிறகு பூங்கொத்து கொண்டு செல்லாத தலைவர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட பூங்கொத்தை எடுத்து மோடியின் கையில் கொடுத்து வாழ்த்தியது தெரியவந்துள்ளது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications