டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபா தேர்தலில் திமுக, அதிமுக, தினகரன் கட்சிக்கு எத்தனை இடங்கள்? இந்தியா டிவி பரபர சர்வே

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபா தேர்தலில் திமுக, அதிமுக, தினகரன் கட்சிக்கு எத்தனை இடங்கள்- வீடியோ

    டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெரும்பான்மை இடங்களை வெற்றி பெற முடியாது என்று இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

    இந்த கருத்துக்கணிப்பு டிசம்பர் 15 முதல் 25 ஆம் தேதி வரையில் 543 லோக்சபா தொகுதிகளில் நடத்தப்பட்டது. இதில் சில சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாகும் ஸ்டாலின்.. குவியும் ஆதரவு.. இந்தியா டுடே பரபர சர்வே!தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாகும் ஸ்டாலின்.. குவியும் ஆதரவு.. இந்தியா டுடே பரபர சர்வே!

    தேசிய ஜனநாயக கூட்டணி 257 தொகுதிகளில் வெல்லக்கூடும் என்று அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. எனவே தனிப்பெரும் கூட்டணியாக பாஜக தலைமையிலான இக்கூட்டணிதான் வர உள்ளது. அதேநேரம், பெரும்பான்மையை தனித்தே இக்கூட்டணியால் பெற முடியாது.

    காங்கிரஸ் கூட்டணி

    காங்கிரஸ் கூட்டணி

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 106 இடங்களை வெல்ல கூடுமாம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இல்லை என்ற அடிப்படையில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்ற சூழ்நிலையில், ஆட்சி அமைப்பதில் பிற கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்த சர்வே தெரிவிக்கிறது. அதாவது, மொத்தம் 140 தொகுதிகள் வரை வெல்லக் கூடுமாம்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

    பிற கட்சிகள் என்ற பிரிவில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள், மக்கள் குடியரசு கட்சி, சசிகலா-தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்டோர் அடங்குவர்.

    பாஜக கூட்டணி

    பாஜக கூட்டணி

    தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக, சிவசேனா, அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம், மிசோராம் தேசிய முன்னணி, அப்னா தளம், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டவை அடங்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக, தெலுங்குதேசம், தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்டவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திமுக முதலிடம்

    திமுக முதலிடம்

    திமுக 21 இடங்களை வெல்ல கூடும் என்றும், காங்கிரஸ் கட்சி 85 தொகுதிகள் வரை வரக்கூடும் என்றும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 10 தொகுதிகளை வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுக 10 தொகுதிகள் வரையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 4 தொகுதிகளிலும் வெல்லக்கூடும் கூடும் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    English summary
    The BJP-led National Democratic Alliance at the Centre may fall nearly 15 seats short of the magic mark of 272 in the 543-seat Lok Sabha, if elections are held now, says the India TV-CNX opinion poll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X