ஸ்டாலினின் திண்ணை பிரசாரம் வீண் போகலை.. தமிழகத்தில் திமுக-காங் கூட்டணி அமோக வெற்றி.. என்டிடிவி சர்வே
டெல்லி: தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களில் வெற்றி பெறும் என என்டிடிவி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வேலூர் தவிர்த்து மற்ற 38 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் இன்றுடன் 7-ஆம் கட்ட இறுதி கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்தன.
இந்த நிலையில் பல்வேறு ஊடகங்கள் மக்களிடம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதில் என்டிடிவி நிறுவனம் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

1 இடத்தில் வெற்றி
அதில் தமிழகத்தில் மொத்தமுள்ள 38 லோக்சபா தொகுதிகளில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வெறும் 11 இடங்களிலும், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.

கடும் உழைப்பு
பெரும்பாலான கருத்துகணிப்புகளிலும் தமிழகத்தை பொருத்தமட்டில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தது.

கடுங்கோபம்
திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டார். நீட் தேர்வு, மீத்தேன் திட்டம், பெட்ரோல் டீசல், எரிவாயு விலையுயர்வு, ஹைட்ரோகார்பன், மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்டவைகளில் பாஜக மீது தமிழகம் கடுங்கோபத்தில் உள்ளது.

37 தொகுதிகளில்
இது புரியாமல் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததே பெரும் சரிவுக்கு காரணம். மற்றொரு காரணம் ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக தேர்தலை அதிமுக சந்திக்கிறது. எனவே இதிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக தனித்து நின்று வெற்றி பெற்றது ஜெயலலிதா என்ற ஒற்றை ஆளுமையால் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

தோல்விக்கான காரணம்
ஆனால் இந்த முறை படுதோல்வியை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் இதற்கு பாஜகவுடன் கூட்டணி மற்றும் ஜெயலலிதா இல்லாதது ஆகியவையே காரணமாக சொல்லப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications