Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆன்லைன் சூதாட்ட தடை.. ஒப்புதல் அளிக்காத ஆளுநர்.. திமுக எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்! என்ன?

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடந்தது. இதில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பிய நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு மற்றும் ச

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு அரசு சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு இன்னும் ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில் மத்தியில் பொது சட்டம் எப்படி கொண்டு வரப்படும்? என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதிலளித்ததோடு, ‛‛விரைவில் ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்த பொது சட்டம் தேவையானதாக உள்ளது'' என்றார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது.

இதற்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்த நிலையில் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதையடுத்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து இணையவழி சூதாட்டத்துக்கு தடை செய்வது தொடர்பான நிரந்தர சட்டம் இயற்ற சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஒப்புதல் அளிக்காத ஆளுநர்

ஒப்புதல் அளிக்காத ஆளுநர்

இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையே தமிழ்நாட்டில் பலரும் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்தனர். இதனால் எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஆர் என் ரவியை விமர்சனம் செய்தனர். இதற்கிடையே சட்ட மசோதா தொடர்பாக சில சந்தேகங்களை ஆளுநர் ஆர்என் ரவி கேட்டார். அதற்கு தமிழ்நாடு அரசு பதிலளித்த நிலையில் இன்னும் கூட அந்த மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆளுநர் முன்பு நிலுவையில் உள்ள மசோதா என்பது இணையவழி சூதாட்டங்களை தடை செய்தல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் தொடர்பான அம்சங்களை ஒருசேர கொண்டுள்ளது.

கட்சியினர் வலியுறுத்தல்

கட்சியினர் வலியுறுத்தல்

இதுவரை அனைவரும் இணையவழி சூதாட்டங்களை தடை செய்ய மட்டுமே சட்டம் கொண்டு வந்த நிலையில் இணையவழி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துவதற்கும், தடை செய்வதற்கும் சேர்த்து சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனால் ஆளுநர் ஆர்என் ரவி விரைவில் இந்த சட்ட மசோவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம்

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம்

இந்நிலையில் தான் இன்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரம் நடந்தது. இதில் எம்பிக்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் நேரடியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதில் அளித்து வந்தனர். அப்போது ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்டம் தொடர்பாக எம்பிக்கள், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவிடம் கேள்விகள் கேட்டனர்.

 பொது சட்டம்

பொது சட்டம்

அதற்கு அஸ்வினி வைஷ்னவ் பதில் அளித்து பேசினார். அவர் கூறுகையில், ‛‛ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தை கட்டுப்படுத்துவதில் ஒருமித்த கருத்துடன் கூடிய பொது சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். வெவ்வேறு மாநிலங்கள் தங்கள் சொந்த சட்டங்களைக் கொண்ட தற்போதைய சூழ்நிலை என்பது குழப்பமாக உள்ளது. இதனால் தொழில்துறை சார்ந்த ஒழுங்குப்படுத்துதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். இதனால் ஒரே மாதிரியான சட்டம் தேவை'' என்றார்.

தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

இந்த வேளையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனும் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக தமிழச்சி தங்கபாண்டியன், ‛‛ஆன்லைன் விளையாட்டுக்கான தடை மற்றும் ஒழுங்குப்படுத்தும் விஷயத்தில் ஒருமித்த கருத்து வேண்டும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார். தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குப்படுத்தும் மசோதா 2022 தற்போதைய ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றுவதற்கு முன்பில் இருந்து நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் இன்று வரை 40க்கும் அதிகமான இளைஞர்கள் இறந்துள்ளனர். மத்திய அரசால் கொண்டு வரப்படும் பொது சட்டம் அமலாகும் வரை பிற மாநிலங்கள் சொந்த சட்டத்தை கொண்டு வருவது உறுதி செய்யப்படுமா?'' என கேள்வி எழுப்பினார்.

மத்திய அமைச்சரின் பதில் இதுதான்

மத்திய அமைச்சரின் பதில் இதுதான்

இதற்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ‛‛இந்தியாவில் 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சொந்தமான சட்டத்தை கொண்டு வந்துள்ளன. இதில் 17 மாநிலங்கள் பொது சூதாட்ட சட்டத்தில் திருத்தம் செய்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த நடவடிக்கை என்பது ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளின் அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகளைத் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் குறிப்பிட்ட மாநிலத்தின் நிலை பற்றி என்னால் இங்கு குறிப்பிட முடியாது. என்னுடைய பாயிண்ட் என்ன என்னவென்றால் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திலேயே ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நடைமுறைகள் உள்ளன. அதன்மூலமாகவே இதனை சிறப்பாக மேற்கொள்ள முடியும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+