செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வு...ஹால் டிக்கெட் வெளியீடு!!
டெல்லி: நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருந்த நிலையில் இன்று நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த தேர்வுகளை கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்த நிலையில் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளும் நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது. ஜெஇஇ மெயின் நுழைவுத் தேர்வு வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது.

டவுன்லோடு
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி:
- ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வதற்கு https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx என்ற இணையதளத்திற்கு செல்லவும்
- நீட் ஹால் டிக்கெட் 2020 என்பதை கிளிக் செய்யவும்
- விண்ணப்ப எண், பிறந்த தேதி, , செக்யூரிட்டி பின் ஆகியவற்றை பதிவு செய்யவும்
- சப்மிட் என்று இருப்பதை கிளிக் செய்து சப்மிட் செய்யவும்
- ஹால் டிக்கெட் ஸ்கிரீனில் தெரியும்
- உங்களது தகவல்கள் அனைத்தும் சரிதானா என்பதை மீண்டும் ஒருமுறை பதிவு செய்யவும்
- இப்போது ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்யவும்.
- தேர்வு எழுதும் மாணவனின் பெயர்
- நீட் 2020 ரோல் நம்பர்
- நீட் பதிவு எண்
- தேர்வு தேதி மற்றும் நேரம்
- தந்தை பெயர், தாய் பெயர்
- பிறந்த தேதி
- இனம்
- கேட்டகரி/சப் கேட்டகரி
- முகவரி
- தேர்வு எழுதும் மொழி
- தேர்வு எழுதும் மையத்தின் பெயர் மற்றும் முகவரி
- கையெழுத்து
ஹால் டிக்கெட்டில் இந்த விவரங்கள் அனைத்தும் கேட்கப்பட்டு இருக்கும்:

பெற்றோர் கையெழுத்து
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்த பின்னர் அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் இடத்தில் உங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை ஒட்டவும். இந்த ஹால் டிக்கெட்டில் பெற்றோர் அல்லது கார்டியனின் கையெழுத்து பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு மையங்களை அறிந்து கொள்ள கீழே இருக்கும் லிங்க கிளிக் செய்யவும்:
Visit https://ntaneet.nic.in/ntaneet/Online/candidatelogin.aspx
- விண்ணப்ப எண்ணை எழுதவும்
- பாஸ்வேர்டு கொடுக்கவும்
- லாக் இன் செய்து எந்த மையம் என்று பார்க்கவும்
நடப்பாண்டில் தேர்வு எழுதுவதற்கு 15.97 லட்சம் பேர் தங்களது பெயரை பதிவு செய்து இருக்கின்றனர். முன்பு இந்த தேர்வு ஏப்ரல் மே மாதங்களில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

நடத்தை விதிமுறைகள்
கொரோனா தொற்று பரவல் இருப்பதால் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் மாஸ்க் அணிந்து, கையுறை அணிந்து செல்ல வேண்டும். கையில் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லலாம். சானிடைசர் கொண்டு செல்ல வேண்டும். தேர்வு அறைக்குள் செல்வதற்கு முன்பு தண்ணீர், சோப்பு கொண்டு கையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு மையத்தில் கொடுக்கப்படும், மூன்று லேயர் மாஸ்க் அணிய வேண்டும்.

தனி அறை
அட்மின் கார்டில் இதற்கான விளக்கங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டு இருக்கும். தேர்வு எழுதுவதற்கு வரும் மாணவர்கள் அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் தெர்மல் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். யாருக்காவது உடல் வெப்பம் 99.4 டிகிடிக்கும் அதிகமாக இருப்பது தெரிந்தால் அவர்களுக்கு என்று தனியாக அமைக்கப்பட்டு இருக்கும் தனி அறையில் தேர்வை எழுத வேண்டும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications