நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்.. மே 5ல் நீட் தேர்வு.. ஜூன் 14ல் ரிசல்ட்
டெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 9ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம். www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற தளங்களில் மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம். மே 5ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வு முகமை இந்த நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு அச்சத்தால் பல மாணவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் இதுவரைக்கும் அந்த தீர்மானத்தை குடியரசுத்தலைவருக்கு அனுப்பவில்லை.
இந்த நிலையில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற தளங்களில் விண்ணப்பிக்கலாம். இன்று தொடங்கி
மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம். மே 5ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது. நீட் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications