மருத்துவ மேற்படிப்புகளுக்கான "நீட் தேர்வு ஹால் டிக்கெட்" வெளியீடு.. டவுன்லோடு செய்வது எப்படி?
டெல்லி: எம்.டி., எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் பிஜி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. ஹால் டிக்கெட்டை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் https://natboard.edu.in/ இந்த லிங்கை ஓப்பன் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். நீட் பிஜி தேர்வு வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நீட் தேர்வினால் ஏழை எளிய கிராமப்புற மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு சிதைந்த போகிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை உலுக்கி வருகிறது.

ஆனாலும் தமிழக அரசின் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்ப்பது இல்லை. இதுவரை இல்லாத அளவுக்கு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளன. தவறுகள் நடந்ததை மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளுக்கு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றமும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படுவது போலவே முது நிலை படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதாவது, இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தனித்தனியாக நீட் என்னும் தகுதித்தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை நீட் தேர்வு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக நடத்தப்படும்.
நீட்டில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இளநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். அதேபோல நீட் பிஜி தேர்வு மூலமாக எம்.டி., எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர முடியும். அந்த வகையில் நீட் பிஜி தேர்வு வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே தேர்வு மையம் சென்றுவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் https://natboard.edu.in/ இந்த லிங்கை ஓப்பன் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். தேர்வு மையத்திற்கு ஹால் டிக்கெட் உடன் அடையாள அட்டையும் எடுத்துச் செல்வது அவசியம் ஆகும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications