கரப்பான் பூச்சி போராட்டத்தில் போலீஸ் அத்துமீறல்? விசாரிக்க குழு அமைப்பு.. உச்சநீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது போலீசார் அளவுக்கு அதிகமான பலத்தை பயன்படுத்தியதாக கூறப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் போலீஸ் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக கடந்த மாதம் போராட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளாக ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற முற்றுகை பேரணியை அறிவித்திருந்தனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

NEET Protest

மாணவர் போராட்டம்

தொடக்கத்தில் அமைதியாக நடைபெற்ற போராட்டம் பின்னர் குழப்பம் ஏற்பட்டது.. போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. சில இடங்களில் பெல்லட் துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில போராட்டக்காரர்கள் மீது கொலை முயற்சி மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டன..

குழு அமைத்து உத்தரவு

போராட்டக்காரர்கள் மீது போலீசார் அதீத பலத்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து விசாரிக்க தனியாக குழுவை அமைத்து உத்தரவிட்டது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி தலைமையில் இந்தக் குழு செயல்படும் என்றும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை சட்டப்பூர்வமானதா, தேவையான அளவில்தான் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் குழு ஆய்வு செய்யும்.

இந்த உயர்மட்ட குழுவில் முன்னாள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி சங்கர் ஜா, முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஷாலிந்தர் கவுர், முன்னாள் சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் சுக்லா மற்றும் முன்னாள் மேகாலயா டிஜிபி எல்.ஆர். பிஷ்னோய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். போராட்டத்தின் போது பெண் போராட்டக்காரர்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தொல்லை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டதாகவும் கூறப்படும் புகார்களுக்கு இந்த குழு முன்னுரிமை அளித்து விசாரணை நடத்தும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது..

தீவிர விசாரணை

மேலும், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அதிகப்படியான நடவடிக்கையை எடுத்திருந்தால்.. அதற்கு யார் உத்தரவிட்டார்கள் என்பது குறித்தும் இந்த குழு ஆய்வு செய்யும். தடியடி, கண்ணீர் புகை மற்றும் ஷாக் அடிக்கும் லத்திகள் போதிய எச்சரிக்கை இல்லாமல் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும். குறிப்பாக பெல்லட் குண்டுகள் பயன்பாடு குறித்தும் இந்த குழு தீவிர விசாரணை நடத்தும்.

போலீசார்

இது தவிர போராட்டங்கள் மற்றும் கைது நடவடிக்கைகளின்போது போலீசார் முறையான யூனிபார்ம் மற்றும் தெளிவான பெயர் உள்ள பேட்ஜ்களை அணிந்திருந்தார்களா என்பதும் ஆய்வு செய்யப்படும். போராட்டக்காரர்களைக் கண்காணிப்பது, அவர்களின் பிரைவசி மற்றும் அமைதியான போராட்டத்திற்கான அரசியலமைப்பு உரிமைகளை போலீசார் மீறினார்களா என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் என இரு தரப்பிலும் காயமடைந்தவர்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்குவது குறித்தும் குழு பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+