இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியது.. ரிசல்ட் பார்ப்பது எப்படி?
டெல்லி: நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலமாக விரைவில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தேசிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தமிழ்நாடு தொடர்ச்சியாக எதிர்த்து வந்தாலும், நீட் தேர்வு கட்டாயம் என்பதில் மத்திய அரசு தீவிரமான நிலைப்பாடு கொண்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு போராடி வருகிறது.

நீட் தேர்வு
இந்த நிலையில் 2025-26 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 4ஆம் தேதி நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். அதிலும் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.
13 மொழிகள் நடந்த நீட் தேர்வு
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்பட்டது. 180 கேள்விகளைக் கொண்ட இந்த தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. இந்த சூழலில் இன்று இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை மாணவர்கள் தங்களது https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
விடைக் குறிப்புகள் வெளியீடு
தேசிய தேர்வு முகமை கடந்த ஜூன் 3ஆம் தேதியே நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட்டது. இந்த விடைக்குறிப்பு குறித்த ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 5ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதன்பின் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்படும்.
ரிசல்ட் பார்ப்பது எப்படி?
அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதில் "NEET UG 2025 Result" என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். இதன்பிறகு வரும் இணைய பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வர்ட் போட்டு சமர்ப்பித்தால், மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications