ராகுல்காந்தி எளிமையான நபர்! சர்ச்சைகளுக்கு மத்தியில் நேபாள பாடகி சரஸ்வோட்டி காத்ரி பாராட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராகுல்காந்தி நேபாளத்தில் நைட் கிளப்புக்கு சென்றது சர்ச்சையான நிலையில் ‛‛ராகுல்காந்தி முன்பு சில பாடல்களை பாடியதை கவுரமாக கருதுகிறேன். ராகுல்காந்தி எளிமையாகவும், சாதாரணமாகவும் இருந்தார்'' என நேபாள பாடகி சரஸ்வோட்டி காத்ரி பாராட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பா நாடுகளுக்கு சென்றதை காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி நேபாளம் சென்றுள்ள போட்டோ, வீடியாேக்களை பாஜகவினர் விமர்சனம் செய்தனர்.

 நைட் கிளப்பில் ராகுல்

நைட் கிளப்பில் ராகுல்

அதாவது ராகுல்காந்தி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நைட் கிளப்பில் இருக்கும் வீடியோவை பதிவிட்டு பாஜகவினர் விமர்சனம் செய்தனர். ராகுல்காந்தி தனது ஊடக நண்பரான சும்னிமாவின் திருமண விழாவில் பங்கேற்ற நிலையில் இந்த வீடியோ வெளியானது. இந்த வீடியோவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா விளக்கம் அளித்தார்.

காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் விளக்கம்

ராகுல் காந்தி தனது நண்பரின் திருமணத்திற்கு தான் காத்மாண்டு சென்றுள்ளார். இது அவரது தனிப்பட்ட பயணம் என்றார். திருமணம், நிச்சயதார்த்த விழாக்களில் பங்கேற்பது இந்தியர்களின் பாரம்பரியம். அது நம் கலாச்சாரம். ஒருவருக்கு நண்பராக இருப்பதோ, அவரது திருமணத்தில் பங்கேற்பதோ என்ன குற்றம் என ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பினார்.

பாஜக விமர்சனம்

பாஜக விமர்சனம்

இருப்பினும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து ராகுல்காந்தியை விமர்சனம் செய்கின்றனர். பாஜகவின் ஐடி விங்க் தலைவர் அமித் மால்வியா, தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி உள்பட பல தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், வீடியோவில் ராகுல்காந்தியுடன் இருக்கும் பெண் சீனாவை சேர்ந்தவர் போல் தெரிகிறது என குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து பாஜக தலைவர்கள் மதுப்பாட்டிலுடன் உள்ள படங்களை காங்கிரஸ் தலைவர்கள் பகிர்ந்து விமர்சனம் செய்தனர். இதனால் இருகட்சியினர் இடையே வார்த்தை போர் நீடித்தது.

 பாடகி பதிவிட்ட புகைப்படம்

பாடகி பதிவிட்ட புகைப்படம்

இந்நிலையில் நேபாளத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பாடகி சரஸ்வோட்டி காத்ரி பங்கேற்று பாடல்கள் பாடினார். தற்போது அவர் ராகுல் காந்தியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் ராகுல்காந்தியை பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

 பெருமையாக கருதுகிறேன்

பெருமையாக கருதுகிறேன்

"இசை அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் சக்தியை கொண்டது. இந்திய பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி முன்னிலையில் நான் சில பாடல்களை பாடியதை கவுரவமாக கருதுகிறேன். ராகுல் மிக எளிமையாக சாதாரணமாக இருந்ததை நான் கவனித்தேன்'' என பாராட்டு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+