பேரவலம்.. உத்தரப் பிரதேசத்தில் கங்கையில் வீசப்படும் சடலங்களை.. பிடிக்க வலைகளை அமைத்த பீகார்
டெல்லி: கங்கை நதியில் வரும் சடலங்களைப் பிடிக்க உத்தரப் பிரதேச எல்லையில் வலையை அமைத்துள்ளதாகவும் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் பீகார் நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உத்தரப் பிரதேசம் - பீகார் எல்லையில் அமைந்துள்ள சவுசா நகரத்தில் நேற்று முன்தினம் கங்கை நதியில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்னரே நேற்று உத்தரப் பிரதேசத்திலும் கங்கை நதியில் சில சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க போதிய பணமில்லாததால் இதுபோல நதியில் உடல்கள் வீசப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
இந்த சடலங்கள் கொரோனா நோயாளிகளின் சடலங்களாக இருந்தால் எங்கு தங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் பீகார் மக்களிடம் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், சடலங்களைப் பிடிக்க உத்தரப் பிரதேச மாநில எல்லையில் கங்கை ஆற்றில் வலை வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆற்றின் எல்லையில் ரோந்துப் பணிகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகப் பீகார் மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற சம்பவங்கலால் மிகவும் வருத்தமற்றதாகவும் இதனால் கங்கை நதிக்கும் பேராபத்து என்றும் அவர் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட 25 உடல்களை உடற்கூராய்வு செய்ததில் அவர்கள் உயிரிழந்து நான்கு முதல் ஐந்து நாட்களை வரை ஆகியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாகவும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications