என்ன சார் அடுத்த முறை சென்னை டூ டெல்லிக்கு.. ரன்னிங்லயே போய்டுவீங்க போல.. நெட்டிசன்கள் அதகளம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்னும் கொஞ்ச நாள்ள சென்னை டூ டெல்லிக்கு ரன்னிங்லயே போய்டுவீங்க போல என நெட்டிசன்கள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனின் நாடாளுமன்றத்தின் அருகே ஓட்டப்பயிற்சி வீடியோவுக்கு ஏக போக கமென்டுகள் குவிகின்றன.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் எங்கு சென்றாலும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதை வாடிக்கையாக கொண்டவர். சொல்ல போனால் சுகாதாரத் துறை அமைச்சர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்.

எத்தனை பிஸி வேலையாக இருந்தாலும் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் சமரசம் செய்யக் கூடாது. அதற்கு மா சுப்பிரமணியனும் ஆகச்சிறந்த உதாரணமாவார்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

மாரத்தான், உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி என தினமும் தனது வாழ்க்கையை தொடங்கும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தற்போது 13 கோரிக்கைகள் அடங்கிய கோப்புகளுடன் டெல்லி சென்றுள்ளார். வந்த இடத்தில் எதற்கு என இல்லாமல் ஆள் அரவமற்ற நாடாளுமன்றச் சாலை அருகே ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

ஓட்டப்பயிற்சி

ஓட்டப்பயிற்சி

கையில் மாஸ்க்குடன் செல்லும் மா. சு வியர்வையால் சட்டை நனையும் அளவுக்கு ஓடியுள்ளார். இவரது செயலை நெட்டிசன்கள் வியந்து பாராட்டுகிறார்கள். சிலர் விமர்சனமும் செய்துள்ளார்கள். "இன்னும் கொஞ்ச நாள்ள சென்னையிலிருந்து டெல்லிக்கு ஓட்டப்பயிற்சி செய்துகிட்டே போய்டுவீங்க போல சார். உங்கள் அர்ப்பணிப்பு வேற லெவல்" என்கிறார் இந்த வலைஞர்.

உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள்

தங்களை போலவே தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் "வரும் முன் காப்போம் "என்ற வகயில் , உடற்பயிற்சிகள் செய்வதை நோக்கி முயற்சிகள் எடுக்க வேண்டும்.

உத்வேகம் சூப்பர்

உத்வேகம் சூப்பர்

இவருக்கு இருக்கும் உத்வேகத்தைத் பார்க்கும்போது எந்த துறையைக் கொடுத்தாலும் சமாளிப்பார் என்றே தோன்றுகிறது.முதல்வரின் சரியான தேர்வு.வாழ்த்துக்கள்.

முதல்வரின் முத்தான தேர்வு

முதல்வரின் முத்தான தேர்வு

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகவும் பொருத்தமான அமைச்சர்... மாண்புமிகு முதல்வரின் முத்தான தேர்வு.... நன்று...

டெல்லி சூப்பர்

டெல்லி சூப்பர்

டெல்லியை நல்லா சுத்தி காமிச்சிங்க , நன்றி

உலக மகா விளம்பரம்

உலக மகா விளம்பரம்

இது ஒரு உலக மகா விளம்பரம் அமைச்சர் அய்யா

தடகள வீரர்

தடகள வீரர்

நீங்கள் ஒரு தடகள வீரர் என்பதை எத்தனை தடவை சொல்வீர்கள். கொஞ்சமாவது அமைச்சராக இருக்க முயற்சி செய்யுங்கள் என்கிறார் இந்த வலைஞர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+