நாளை கும்பாபிஷேகம்.. சட்டென உள்ளே வந்த இஸ்ரோ.. அயோத்தி ராமர் கோயில்.. பார்க்கும் போதே மிரட்டுதே
டெல்லி: அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறும் நிலையில், சாட்டிலைட்டில் இருந்து எடுக்கப்பட்ட ராமர் கோயில் படம் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நாளைய தினம் அயோத்தியில் பிரமாண்டமான கும்பாபிஷேக விழா நடைபெறும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ ராமர் கோயில் குறித்த புதிய படங்களை வெளியிட்டுள்ளன.

அதாவது சாட்டிலைட்டில் இருந்து பார்த்தால் இந்த அயோத்தி ராமர் கோயில் எப்படி இருக்கும் என்பது குறித்த போட்டோவை இஸ்ரோ இணையத்தில் பகிர்ந்துள்ளது. இந்த போட்டோவை எடுத்தது முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சாட்டிலைட் என்பதும் மற்றொரு சிறப்பாகும்.
சாட்டிலைட் படங்கள்: விண்வெளியில் இருந்து பார்க்கும் போது இந்த ராமர் கோயில் மிகவும் அற்புதமாக இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 2.7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராமர் கோயில் தளத்தை முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்திய ரிமோட் சென்சிங் சாட்டிலைட் விண்வெளியில் இருந்து போட்டோ எடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் 16ஆம் தேதி எடுக்கப்பட்ட போட்டோ இப்போது வெளியிடப்பட்டு உள்ளது. அப்போது அந்தப் பகுதியில் கடுமையான பனி மூட்டம் நிலவிய நிலையில், தெளிவான காட்சி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சாட்டிலைட் போட்டோவில் தஷ்ரத் மஹால் மற்றும் சரயு நதி ஆகியவை தெளிவாக்கத் தெரிகிறது. மேலும், புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையமும் இந்த சாட்டிலைட் படத்தில் தெரிகிறது.
டிரெண்டாகும் படம்: இந்த படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சாட்டிலைட்டில் உள்ள ராமர் கோயில் படத்தை இணையத்தில் பரப்பும் நெட்டிசன்கள், பக்தர்கள் அதன் பிரம்மாண்டத்தை புகழ்ந்து வருகிறார்கள்.
இந்தியாவுக்குச் சொந்தமான 50 சாட்டிலைட்கள் இப்போது விண்வெளியில் உள்ளன, அவற்றில் சில ஒரு மீட்டர் அளவுக்குத் துல்லியமான படங்களை எடுக்கும். அந்த சாட்டிலைட் எடுக்கும் படங்களை இஸ்ரோவின் ஒரு பகுதியான ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரால் பிரசஸ் செய்யும். அந்த படங்கள் தான் இப்போது வெளியாகியுள்ளது.
ராமர் சிலை: இது மட்டுமின்றி இந்த கோயில் கட்டுமானத்தில் இஸ்ரோவின் பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ராமர் சிலையை வைக்கச் சரியான இடத்தைக் கண்டறிவதே மாபெரும் சவாலாக இருந்தது. ராமர் பிறந்ததாக நம்பப்படும் அந்த இடத்தில் 3 அடி X 6 அடியில் சிலை வைக்கப்பட வேண்டும் என்று ராமர் கோயில் அறக்கட்டளை விரும்பியது.
இஸ்ரோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் அது எந்த இடம் என்பது கண்டறியப்பட்டு, ராமர் சிலை வைக்கும் இடம் இறுதி செய்யப்பட்டது. சரியான இடத்தை அடையாளம் காண, கட்டுமான பணிகளைக் கவனிக்கும் எல் & டூ நிறுவனம் அதிநவீன டிஃபெரன்ஷியல் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் என்ற முறையைப் பயன்படுத்தினர். இதன் மூலம் மிகவும் துல்லியமான இடம் அடையாளம் காணப்பட்டது.
தொடர்ந்து கோயிலின் கருவறையில் சிலை வைக்கத் தேவையான இடம் உருவாக்கப்பட்டது. முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'சுதேசி ஜிபிஎஸ்' எனப்படும் NavIC சாட்டிலைட்களும் இடங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டன. NavIC தொழில்நுட்பத்தில் இப்போது ஐந்து சாட்டிலைட்கள் வேலை செய்து வருவதாகவும், தற்போது இந்த அமைப்பு மேம்படுத்தப்பட உள்ளதாகவும் இஸ்ரோ ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications