இதுதான் காரணமா? சுஷ்மிதா சென்னுக்கு 2013ல் லலித் மோடி அனுப்பிய "மெசேஜ்".. தோண்டி எடுத்த நெட்டிசன்ஸ்!
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுடன் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி டேட்டிங் செய்து வருவதாக போட்டுள்ள டுவீட் தற்போது சர்வதேச அளவில் டிரெண்டாகி இணைய உலகத்தை கிரங்கடித்துள்ளது.
இந்தியாவில் இன்று சக்கை போடு போட்டு வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை உருவாக்குவதில் முன்னோடியாக திகழ்ந்தவர் பிரபல தொழிலதிபர் லலித் மோடி. நிதி மோசடியில் சிக்கிய லலித் மோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். எனினும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் லலித் மோடி, நேற்று வெளியிட்ட ஒரு பதிவுதான் இணைய உலகத்தை கிரங்கடித்துள்ளது.
இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்-ஐ காதலிப்பதாக லலித் மோடி போட்ட பதிவுதான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்குகளில் ஒன்றாக மாறியுள்ளது.

காட்டுத்தீ போல பரவும் டுவிட்
இது தொடர்பான செய்திகள் நேற்று இரவில் இருந்து சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
இதனை லலித் மோடியே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு, "இப்போதுதான் மாலத்தீவு உள்பட உலக நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் வந்திருக்கிறேன். என்னில் பாதியான சுஷ்மிதா சென் பற்றி இங்கு குறிப்பிடவில்லை. சுஷ்மிதா சென் உடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறேன். நிலவில் இருப்பது போல் உணர்கிறேன்" எனக் கூறியிருந்தார்.

திருமணம் செய்து கொண்டனரா?
இந்த டுவிட்டர் செய்தியால் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனரா? என நெட்டிசன்கள் தொடர்ந்து ஏவுகனை கேள்விகள் எழுப்பியதால் அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக அடுத்த டுவிட் ஒன்றை லலித் மோடி போட்டு விட்டார்.
அந்த பதிவில், 'நாங்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் தான் செய்து வருகிறோம். விரைவில் அதுவும் ஒருநாள் நடக்கலாம்' என லலித் மோடி கூறியுள்ளார்.

லலித் மோடியுடன் காதல்
இந்த டுவிட்டை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள், '56 வயதில் 46 வயது பாலிவுட் நடிகையை மடக்கி விட்டாரே' என புலம்பாத குறைதான். லலித் மோடி தனது மனைவி மினல் மோடியை கடந்த 2018-ல் விவாகரத்து செய்தது நினைவுகூரத்தக்கது.
சுஷ்மிதா சென் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மாடல் ரோஹ்மன் என்பவரை பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக அறிவித்து இருந்தார். இந்த பிரிவுக்கு பிறகு புதிய உறவுக்கு இடம் கொடுக்கமாட்டார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது லலித் மோடியை காதலித்து வருகிறார்.

இதோடு விடுவாங்களா.. நம்ம நெட்டிசன்கள்...
எனினும் நெட்டிசன்கள் இதோடு விட்டுவிடாமல், சுஷ்மிதா சென்னுக்கு லலித் மோடி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னால் போட்ட டுவிட் ஒன்றை தோண்டி எடுத்து அதையும் தங்கள் விவாதத்திற்கு தீனியாக்கி கொண்டனர்.
அப்படி என்னதான் லலித் மோடி போட்டு இருக்கிறார்னு பார்த்தா.. ''எனது மெசேஜ்க்கு ரீப்ளே பண்ணுங்க" என லலித் மோடி சுஷ்மிதா சென்னுக்கு 2013-ம் ஆண்டு டுவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது இந்த டுவிட்டையும் டிரெண்ட் செய்யும் நெட்டிசன்கள், இந்த முயற்சியை ஒருபோதும் கைவிடக்கூடாது என்றும் டுவிட் செய்து வருகின்றனர். 'அதிகப்படியாய் ஒருவர் மீது நாம் காட்டும் பற்று நமது இலக்கை அடைய உதவும்' எனவும் நெட்டிசன்கள் கருத்துமழையை பொழிந்து வருகின்றனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications