10+2 கிடையாது.. இனி 5+3+3+4 கல்விமுறை.. சர்வதேச தரத்தில் புதிய கல்விக்கொள்கை.. மோடி பெருமிதம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் கல்வி முறையை மாற்ற வேண்டிய கால கட்டம் இது,10+2 என்ற கல்வி முறைக்கு பதில் 5+3+3+4 என்ற கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது, இது சர்வதேச தரத்தில் இருக்கும் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.

புதிய கல்விக் கொள்கை மூலம் உயர் கல்வி சீர்திருத்தங்கள் என்ற மாநாட்டில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். புதிய கல்விக்கொள்கை குறித்து அவர் இந்த மாநாட்டில் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

புதிய கல்விக்கொள்கையின் பலன்கள், அதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு, ஆதரவு என்று பல விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

பிரதமர் மோடி தனது உரையில் புதிய கல்வி கொள்கை தொடர்பாக 3,4 ஆண்டுகளாக தொடர்ந்து விவாதங்கள், ஆலோசனைகள் நடத்தப்பட்டது. முறையான ஆலோசனைக்கு பின்பே இதை கொண்டு வந்து இருக்கிறோம். விவாதங்கள் மூலமாக கல்வி துறையை நாம் மேலும் வலிமையானதாக்க முடியும். சர்வதேச முறைகளுக்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிகொள்ள வேண்டும்.

குடிமகன்கள் முக்கியம்

குடிமகன்கள் முக்கியம்

நல்ல குடிமக்களை உருவாக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டுமானால் கல்வியை நாம் மாற்ற வேண்டும் . மாணவர்கள் சமூக சூழ்நிலையோடு ஒன்றி கல்வி கற்க வேண்டும்.கடந்த காலத்தில் விமர்சன ரீதியான மற்றும் புத்தாக்க சிந்தனைகள் புறக்கணிக்கப்பட்டு இருந்தனஇந்தியாவின் கல்வி முறையை மாற்ற வேண்டிய கால கட்டம் இது.

கல்வி முறை

கல்வி முறை

10+2 என்ற கல்வி முறைக்கு பதில் 5+3+3+4 என்ற கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்கள் நலனுக்காக பட்டயப் படிப்புகள் 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. புதிய கல்வி கொள்கையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி என்பதும் மிக முக்கியமானது. உலக நாடுகள் உடன் போட்டியிடும் அளவிற்கு கல்விக்கொள்கை இருக்க போகிறது.இனி மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்த தேவையில்லை.

பெரிய தரம்

பெரிய தரம்

பாதியில் படிப்பை நிறுத்தியவர்கள் புதிய கல்விக் கொள்கையால் படிப்பை தொடரலாம்.மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி இருக்க வேண்டும். மாணவர்கள் எப்படி யோசிக்க வேண்டும் என்பதில் புதிய கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது. கல்வியையும் ஆராய்ச்சியையும் இணைக்கிற மிக முக்கிய பங்களிப்பை புதிய கல்வி கொள்கை வழங்கும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+