என்ன ப்ளேவர் வேணும்.. புதிதாக உதித்த "ஐஸ்கிரீம் பானிபூரி".. பரவும் வீடியோ.. முகம் சுழித்த நெட்டிசன்ஸ்!
ஐஸ்கிரீம் பானிபூரி ஒன்று சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படுவது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டெல்லி: ஐஸ்கிரீம் பானிபூரி ஒன்று சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சாலையோர பானிபூரி கடைக்காரர் ஒருவர் பானிபூரிக்குள் ஐஸ்கீரிமை திணிக்கிறார். பிறகு மூன்று வகையான பிளேவர் சாஸ்களையும் அதன் மேலே ஊற்றி வாடிக்கையாளருக்கு பரிமாறுகிறார்.
சாலையோர கடைகளில் அதிகம் நம் கண்களில் தென்படுவது பானி பூரி கடைகளாகத்தான் இருக்கும்.
சாயங்கால நேரத்தில் தள்ளு வண்டிகள் மூலமாகவோ ஏன் ஒரு சைக்கிளில் கூட வைத்துகொண்டு வட இந்தியர்கள் பலரும் பானி பூரி விற்பதை நாம் பார்த்திருப்போம்.

பானி பூரி
ஈவ்னிங் ஆனாலே நண்பர்களுடன் அரட்டை அடித்தபடியே நொறுக்குத்தீனிகள் போல பானி பூரியை ருசி பார்ப்பது எங்கும் காணக்கூடிய காட்சிகளாக இருக்கும். இந்த பானி பூரியில் சிறிய பூரிக்குள் உருளைகிழங்கு வைக்கப்பட்டு இருக்கும். அதோடு புளிப்பு சுவையுடன் கூடிய ஒரு பானியும் கொடுப்பார்கள். இதை சேர்த்து சாப்பிட்டால் போதும் அதன் ருசி சில நிமிடங்களுக்கு நமது நாக்கை விட்டு அகலாது. அந்த அளவுக்கு அட்டகாசமான டேஸ்ட் ஆக இருக்கும்.

ஐஸ்கிரீம் தோசை
புதினா, பெருங்காயம் , பெருஞ்சீரகம் விதைகள் , சீரகப் பொடி , கருப்பு உப்பு , ஜல்ஜீரா பொருட்களுடன் தயாரிக்கப்படும் பானியே பானிபூரியின் தனித்த சுவைக்கு காரணம்.. சரி இதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம். இணையத்தில் எப்போதுமே புது விதமான உணவு வகைகள் அதிக அளவில் நெட்டிசன்கள் மத்தியில் பரப்பப்படும். அண்மையில் கூட ஐஸ்கிரீம் தோசை ஒன்றை சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்பட்டது குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி நெட்டிசன்கள் மத்தியில் விவாதப்பொருளானது.

ஐஸ்கிரீம் பானி பூரி
இந்த நிலையில் அந்த வரிசையில் ஐஸ்கிரீம் பானிபூரி ஒன்று சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படுவது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், சாலையோர பானிபூரி கடைக்காரர் ஒருவர் பானிபூரிக்குள் ஐஸ்கீரிமை திணிக்கிறார். பிறகு மூன்று வகையான பிளேவர் சாஸ்களையும் அதன் மேலே ஊற்றி வாடிக்கையாளருக்கு பரிமாறுகிறார்.

பானிபூரியை வைத்து விளையாடுகிறீர்களா?
அதேபோல், ஐஸ்கீரிம் சேர்க்காமல் வெறும் ஐஸ்சை மட்டும் உள்ளே வைத்து சாஸ்களை ஊற்றி பானிபூரியை அந்த கடைக்காரர் வாடிக்கையாளருக்கு கொடுக்கிறார். இப்படி பானிபூரியில் எங்கும் கேள்விப்படாத வெரைட்டிகளை காட்டி அந்த கடைக்காரர் கொடுப்பதை வாடிக்கையாளர்களும் வாங்கி சாப்பிட்டு செல்கிறனர். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோதான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், பானிபூரியை வைத்து விளையாடுகிறீர்களா என்ற ரீதியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், 'கண்டிப்பாக அந்த கடைக்காரர் மனநல மருத்துவரை அணுகுவது நல்லது' என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications