டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Budget 2019: இஸ்ரோவின் வணிக ரீதியிலான செயல்பாடுகளுக்காக உருவாகிறது NSIL!

Google Oneindia Tamil News

டெல்லி: இஸ்ரோவின் வணிக ரீதியிலான செயல்பாடுகளுக்காக புதியதொரு அமைப்பு ஏற்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான அரசு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் ஏற்கனவே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

New organization called new Space India Limited (NSIL) to be formed, to tap benefits of ISRO

அப்போது அவர் பேசுகையில் விண்வெளித் துறையில் இந்தியா பெருமளவில் முன்னேறி வருகிறது. அன்னிய நாடுகளின் செயற்கைக் கோள்களை செலுத்தும் அளவுக்கு விண்வெளி ஆய்வு வளர்ச்சி அடைந்துள்ளது.

வணிக ரீதியில் நமது திறனை மேம்படுத்துவதற்கான நேரம் இது. எனவே இஸ்ரோவின் வணிகரீதியான செயல்பாடுகளுக்காக புதிய அமைப்பு (New Space India Limited (NSIL)) தொடங்கப்படும் என்றார் நிர்மலா சீதாராமன்.

English summary
India has emerged as a major space power. It is time to harness our ability commercially. To harness India's space ability commercially, a public sector enterprise, New Space India Limited (NSIL) has been incorporated to tap benefits of ISRO.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X