புதிய நாடாளுமன்றம் டெல்லில இருக்கு.. அதுக்கு உள்ள இந்தியாவே இருக்கு! எந்த பொருள் எந்த மாநிலம்?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியால் இன்று திறந்து வைக்கப்படும் புதிய நாடாளுமன்றம் டெல்லியில் இருந்தாலும், கட்டமைக்க இந்தியா முழுவதிலும் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது அதை மேலும் சிறப்பாக்குகிறது.
தமிழ்நாட்டு செங்கோல்: கடந்த 1947 ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தால் உருவாக்கப்பட்ட செங்கோல், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்த இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட உள்ளது.

ஔரங்காபாத் அசோகர் சிங்க சின்னம்: இந்திய தேசியக் கொடியின் மத்தியில் இருக்கும் அசோக சக்கர சின்னம், அசோகர் சிங்க சின்னத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த அசோகர் சிங்க சின்னம் நாடாளுமன்ற வெளிப்புறத்தை அலங்கரிக்கிறது. இதனை தயாரிப்பதற்கான பொருட்கள் மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் மற்றும் ஜெய்பூரில் பெறப்பட்டன. நாடாளுமன்ற வெளிப்புற அமைப்பின் பணிகள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செய்யப்பட்டது.
மும்பை மேஜைகள்: புதிய நாடாளுமன்றத்தில் லோக் சபா மற்றும் ராஜ்ஜிய சபா அரங்குகளுக்கான மேற்கூரைகளுக்கு பயன்படுத்தப்பட்ட எஃகு டாமன் & டையூவில் இருந்து சேகரிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தின் அஹமதாபாத்தில் பித்தளை வேலைகள் நடைபெற்று உள்ளன. உறுப்பினர்கள் பயன்படுத்தும் மேஜைகளும் இருக்கைகளும், அலுவலக பொருட்களும் மும்பையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கட்டிடத்தின் தரைக்கு மிர்சாபூர் கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கிறது.
திரிபுரா மூங்கில்: புதிய நாடாளுமன்றத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியில் இருந்து தேக்கு மரங்கள் கொண்டு வந்து பயன்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல், கட்டிடத்தின் தரையில் திரிபுரா மூங்கிலும் பதிக்கப்பட்டு இருக்கிறது. வளாகத்தின் நடைபாதைக்காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டுபுதாலியில் இருந்து கல் திரட்டுகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.
உபி கற்கள்: அரியானா மாநிலம் ஷார்கி தாத்ரி பகுதியில் எம் சாண்ட் தயாரிக்கப்பட்டு கட்டுமானத்துக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் அரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து இருந்து சிமெண்ட் கற்கள் பெறப்பட்டு கட்டுமானத்துக்காக பயன்படுத்தப்பட்டன. மழை நீர் வெளியேற்றத்துக்காக அகமதாபாத்தில் தயாரிக்கப்பட்ட சிமெண்ட் அகழிகள் பயன்படுத்தப்பட்டன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications