“டாப் ஆங்கிளில்” பாருங்க.. உதயசூரியன் வடிவில் புதிய நாடாளுமன்ற இருக்கைகள்! நெட்டிசன்கள் குசும்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி காலை புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்து இருக்கும் நிலையில் நேற்று முந்தினம் அவர் வெளியிட்ட புதிய நாடாளுமன்றத்தின் வீடியோவில் உள்ள பருந்து பார்வை காட்சியை வைத்து அதன் இருக்கை அமைப்பு திமுகவின் சின்னமான உதயசூரியன் வடிவில் இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் பழைய நாடாளுமன்ற வளாகம் அருகிலேயே முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்றத்தை கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்த புதிய நாடாளுமன்ற பணிகளுக்காக அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில் இன்று புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி சம்பிரதாயப்படி திறந்து வைத்து இருக்கிறார். இதற்காக இன்று காலை புதிய நாடாளுமன்றத்துக்கு வந்த பிரதமர் மோடி முன்னிலையில் ஹோம பூஜைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து சிருங்கேரி மடத்தினரால் கணபதி ஹோமத்துடன் திறப்பு விழா பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
அதை தொடர்ந்து தமிழில் தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டது. ஒரு மணி நேரம் இந்து மத வழக்கப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று சம்பிரதாயப்படி நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. அதை மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி நெடுஞ்சான்கிடையாக செங்கோல் முன் மண்டியிட்டு மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை நிறுவினார்.
செங்கோல் நிறுவப்பட்ட பிறகு இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம் உள்ளிட்ட பல மதங்களின் சார்பில் சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பிரம்மிப்பூட்டும் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானம், வசதி, அழகியல் என அனைத்தும் அதில் காட்சிபடுத்தப்பட்டு இருந்தன.
டிரோன் மூலம் கழுகு பார்வையில் முக்கோன வடிவிலான நாடாளுமன்றத்தின் கட்டிடம், மக்களவை மற்றும் மாநிலங்களவை இருக்கை அமைப்புகள் காட்சிபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டன. இந்த நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட காட்சியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றன.

அதற்கு காரணம், அதன் இருக்கை அமைப்பை டாப் ஆங்கிளில் இருந்து பார்க்கையில் திமுகவின் சின்னமான உதயசூரியனைபோல் இருக்கிறதாம். இதனை பலர் பதிவிட்டு உள்ள நிலையில் பழைய நாடாளுமன்ற இருக்கை அமைப்புமே ஏறத்தாழ இதேபோன்றுதான் இருக்கும் என பலர் விளக்கம் அளித்து வருகிறார்கள்.

அனைத்து எம்.பிக்கள் எளிதில் இருக்கைகளுக்கு செல்லும் வகையிலும், சபாநாயகர் இருக்கை அருகே வரும் வகையில் இதுபோன்ற இருக்கை அமைப்பு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இரு அவைகளிலும் உள்ள இருக்கைகள், மேஜைகள் மற்றும் பிற அலுவலக பொருட்கள் மும்பையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications