பாஸ்டேக் புதிய நடைமுறை இன்று முதல் அமல்.. வாகன ஓட்டிகள் அறிய வேண்டிய மேஜர் விஷயம்
டெல்லி: வாகனங்களுக்கான 'பாஸ்டேக்' தொடர்பான சில நடைமுறைகள் இன்று முதல் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி 5 ஆண்டுகள் பழமையான பாஸ்டேக்குகள் மாற்றப்பட வேண்டும். 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் எடுத்த பாஸ்டேக்குகள் கே.ஒய்.சி. விவரங்களுடன் புதுப்பிக்கப்பட வேண்டும். வாகனங்களின் பதிவு எண், சேசிஸ் எண் ஆகியவற்றை, பாஸ்டேக் உடன் இணைக்க வேண்டும்
தேசிய பணப்பரிவர்த்தனை வாரியம் (NPCI) அறிவித்தபடி, FASTags க்கான புதிய விதிமுறைகள், மின்னணு கட்டண வசூல் முறை இன்று முதல் (ஆகஸ்ட் 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கணிணி எளிதாக பாஸ்டேக்குகளை அடையாள கொள்ளும் வகையிலும், பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

FASTag விதிகள் மற்றும் காலக்கெடு: தேசிய பணப்பரிவர்த்தனை வாரியம் அறிவித்துள்ள புதிய விதிகளின் படி பாஸ்டேக் பயன்படுத்துவோர் கேஒய்சி விவரங்களை அக்டோபர் 31க்குள் தெரிவிக்க வேண்டும். அதாவது அக்டோபர் 31ம் தேதிக்குள், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் பாஸ்டேக்குகளை வாங்கியவர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை இணைக்க வேண்டும்.
அதேநேரம் ஐந்து வருடங்களுக்கும் மேல் ஆக்கிவிட்டது என்றால், பாஸ்டேக்குகளை முழுமையாக மாற்ற வேண்டும். இதனையும் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் செய்ய வேண்டும். இன்று முதல், பாஸ்டேக் பயன்படுத்துவோர், பாஸ்டேக்குடன் வாகனத்தின் பதிவு எண் மற்றும் சேஸ் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும். புதிய வாகன உரிமையாளர்கள் தங்கள் பதிவு எண்ணை வாங்கிய 90 நாட்களுக்குள் அப்டேட் செய்ய வேண்டும்.
பாஸ்டேக் பயன்படுத்துவோர் அதனை சுங்கச்சாவடிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில் வாகனத்தின் முன்பக்கத்தில் கண்டிப்பாக தங்கள் பாஸ்டேக்குகளை ஒட்ட வேண்டும். அத்துடன் பாஸ்டேக்கை மொபைல் எண்ணுடன் இணைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த புதிய விதிகள் பாஸ்டேக் பயன்படுத்துவோருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.. குறிப்பாக பழைய வாகனங்கள் அல்லது பழைய பாஸ்டேக் பயன்படுத்துவோரை கணிசமாக பாதிக்கும். இந்த விதிமுறைகளுக்கு மாறாவிட்டால், சுங்கச்சாவடிகளில் தேவைற்ற சிரமங்கள் ஏற்படும். உங்கள் பாஸ்டேக் செல்லாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் பாஸ்டேக் வாங்கிய தேதியை பாருங்கள். ஒருவேளை 3-5 வருடத்திற்குள் பாஸ்டேக் வாங்கி இருந்தால், அக்டோபர் 31 க்கு முன் KYC அப்டேட் செய்து முடிக்க வேண்டும்.
5 வருடங்களுக்கும் மேலான பாஸ்டேக் என்றால் அடியோடு மாற்றிவிடுங்கள். அதேநேரம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் உங்கள் வாகனத்தின் பதிவு மற்றும் சேஸ் எண்கள் பாஸ்டேக் உடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யுங்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications