டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூகுள் "கோன்"ஐத் தொட்டா குபீர்னு சத்தம்.. அடடே புது வருஷம் வந்தாச்சுங்க.. செம "டூடுள்"!

Google Oneindia Tamil News

டெல்லி: புத்தாண்டை முன்னிட்டு 2020ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று கூகுள் நிறுவனம் அழகான டூடுல்களை உருவாக்கியது. அதிலும் அழகான ஒலியுடன்!

கூகுள் என்பது உலகின் மிகப் பெரிய தேடுபொறியாகும். இந்த நிறுவனம் புத்தாண்டையொட்டி அதாவது 2020 முடியவுள்ளதை அடுத்து புதிய டூடுலை உருவாக்கியுள்ளது.

New Years Eve 2020: Google Doodle new year creatives

அதற்கு புத்தாண்டு ஈவ் 2020 (New Year's Eve) என பெயரிடப்பட்டுள்ளது. கூகுளுக்கு சென்றால் அதில் உள்ள டூடுலில் வீடு போன்று உள்ளது. அங்கு பட்டாசுகள், பல்புகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

அதில் 2020 என்ற ஒரு கடிகாரமும் இருக்கிறது. டூடுலை கிளிக் செய்தால் புத்தாண்டு கொண்டாட்ட பக்கத்திற்கு அழைத்து செல்கிறது. அதில் ஒரு ஐஸ்கிரீம் கோன் போல் உள்ளது. அதை கிளிக் செய்தால் குபீர் என சப்தம் கேட்கிறது. அந்த கோனில் இருந்து கலர் கலராக நிறைய பட்டங்கள் பறக்கின்றன.

New Years Eve 2020: Google Doodle new year creatives

உலகில் புத்தாண்டுகள் எவ்வாறு கொண்டாடப்படுகின்றன என்பது குறித்த தகவல்களும் அதில் காணப்படுகின்றன. மேலும் புதிய ஆண்டு தொடர்பான தகவல்களும் அதில் காணப்படுகின்றன.

இந்த கூகுள் நிறுவனமானது 1998-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் நிறுவனர்களான லாரி பேஜும் செர்ஜி பிரினும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்றவர்களாவர்.

English summary
New Year's Eve 2020: Google Doodle new year creatives, one of the best with music.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X