ஆபரேஷனை ஆரம்பிக்கணும் போலயே.. ம்ம்.. ரிசார்ட்டை புக் பண்ணுங்க.. மத்திய பிரதேசத்தில் தொங்கு சட்டசபை!
போபால்: மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்கே பாஜக - காங்கிரஸ் இடையே மிக கடுமையான போட்டி இருக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக அங்கே தொங்கு சட்டசபை உருவாகும் என்று நியூஸ் 18 கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த முறை கூட இப்படித்தான் நடந்தது. கடந்த தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால் 1 வருடத்தில் அங்கே கமல்நாத் ஆட்சியை ஜோதிராதித்யா சிந்தியா கவிழ்த்தார். இவர் பாஜகவில் இணைந்து தன்னுடன் சில எம்எல்ஏக்களையும் அழைத்து சென்று ஆட்சியை கவிழ்த்தார். இதன்பின் வந்த இடைத்தேர்தலில் பாஜக கூடுதல் எம்எல்ஏக்களை மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு வந்தார்;
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 114, பாஜக 109 இடங்களில் வென்றது. அதன்பின் 1 வருடத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிந்தியா தலைமையில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் பாஜக 19 இடங்களில் வென்றது. இதன் மூலம் 128 இடங்கள் என்று மெஜாரிட்டி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது.
மத்திய பிரதேச வரலாறு; மத்திய பிரதேசம் பொதுவாகவே பாஜக ஆதரவு மாநிலம். குஜராத்திற்கு அடுத்து.. ஏன் குஜராத்தை விட.. பாஜக ஆதரவு அதிகம் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம். பாஜகவின் கோட்டை என்று கூட இதை சொல்லலாம்.

மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது. அதன்பின் மீண்டும் ஆப்ரேஷன் கமலாவுக்கு பின் கடந்த 4 ஆண்டுகளாக அங்கே ஆட்சி செய்தது.
கருத்து கணிப்பு: மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்கே பாஜக - காங்கிரஸ் இடையே மிக கடுமையான போட்டி இருக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக அங்கே தொங்கு சட்டசபை உருவாகும் என்று நியூஸ் 18 கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
இங்கே 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும்.
இந்த நிலையில் நியூஸ் 18 நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 116 இடங்களும், காங்கிரஸுக்கு 111 இடங்களும் மற்றவர்களுக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த முறை போல இந்த முறையும் ஆபரேஷன் கமலா.. குதிரை பேரம்.. எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் அடைப்பது போன விஷயங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications