நாடே காவிமயமாக போகிறது.. நியூஸ் 18 தமிழ்நாடு டிவியின் கருத்து கணிப்பிலும் மீண்டும் பாஜக ஆட்சி
Recommended Video
டெல்லி: நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிலும் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் 542 தொகுதிகளுக்கும் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இன்று 7-ஆவது கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் இன்று வெளியாகின.

இதை நாடே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இதில் நியூஸ் 18 தமிழ்நாடு டிவியின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன..
#News18IPSOSExitPoll | தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்#ElectionsWithNews18 | Follow #ExitPoll2019 |https://t.co/NZDe9E6bIQ pic.twitter.com/bjlwfa2ivf
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 19, 2019
அதில் பாஜக 292 முதல் 312 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் காங்கிரஸ் கட்சி 62 முதல் 72 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
இதர கட்சிகள் 102 முதல் 112 வரை இடம் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கடுமையான பிரசாரத்தை மேற்கொண்ட போதிலும் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications